முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைக்கும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர்: படம் ஹிட் கன்பார்ம்

கீதா கோவிந்தம் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படைத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ படத்தின் நடிகை மிருனாள் தாகூர் நடிக்கவுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 15, 2023, 01:02 PM IST
  • முன்னணி நடிகருடன் கூட்டணி அமைக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு.
  • பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படைத்தில் நடிக்கவுள்ளார்.
  • இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கவுள்ளார்.
முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைக்கும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர்: படம் ஹிட் கன்பார்ம் title=

பிளாக்பஸ்டர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழில் 'தளபதி' விஜய்யை வைத்து வாரிசு படத்தை எடுத்திருந்தார். இந்த படம் பெரும் அளவில் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது தனது அடுத்த பெரிய படம் குறித்த தகவலை நேற்று, ஜூன் 14 புதன்கிழமை அன்று அவர் அறிவித்திருந்தார். இந்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் தற்போது அடுத்தாக SVC54 / VD13 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கிறது, மேலும் கடந்த ஆண்டு துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த மிருனாள் தாகூர் இந்த படத்தின் கதாநாயகியாகவும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டா படத்தின் கதாநாயகனகவும் நடிக்கயுள்ளனர்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருனாள் தாகூரின் VD13 படத்திற்கான பிரமாண்ட பூஜை விழா இன்று நடைபெற்றது, இதில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் கீதா கோவிந்தம் மற்றும் சர்க்காரு வரி பாடா படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் பரசுராம் பெட்லா கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | Samantha: ஒரு தொடரில் நடிக்க சமந்தாவிற்கு இத்தனை கோடி சம்பளமா..!

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரை இப்படத்தில் இடம்பெற்ற ‘இன்கேம் இன்கேம்’ பாடல் டிரெண்ட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் வெற்றி பயணத்தில் முக்கிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தற்போது இந்த கூட்டணி VD13 படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. அத்துடன் நேற்று நடைபெற்ற படத்தின் பூஜை நிகழ்வின் சிறப்பு தொகுப்பினை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. எனவே இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு படத்தினை ரசிகர்கள் பெருமளவு வரவேற்று அப்படத்தை வெற்றி பெற செய்தனர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்த இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் உலகளவில் ரூ 300 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 36 வயதில் அடிக்கும் ஜாக்பாட்..! சமந்தா காட்டில் பணமழை..! பொறாமையில் முன்னணி நடிகைகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News