ஏ.ஆர். ரஹ்மானுக்காக திரைத்துறையினருக்கு பாரதிராஜா வைத்த வேண்டுகோள்

இரவின் நிழல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள திரைத்துறையினருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் வைத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 8, 2022, 03:28 PM IST
  • இரவின் நிழல் இசை வெளியீட்டு விழா
  • பாரதிராஜா வைத்த வேண்டுகோள்
  • ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல்
ஏ.ஆர். ரஹ்மானுக்காக திரைத்துறையினருக்கு பாரதிராஜா வைத்த வேண்டுகோள் title=

தமிழில் எப்போதும் வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுப்பவர் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன். கதையே இல்லாமல் அவர் எடுத்த ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படம், ஒரு கதாபாத்திரத்தை மட்டும் திரையில் உலாவவிட்டு அவர் எடுத்த ‘ஒத்த செருப்பு’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

ஆனாலும் படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என பார்த்திபன் தொடர்ந்து ஆதங்கப்பட்டுக்கொண்டே இருந்தார். இந்தச் சூழலில் ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

Parthipan

இதனையடுத்து பார்த்திபன் ஒரே ஷாட்டில் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா, இரவின் நிழல் குறித்தும், பார்த்திபன்,ஏ.ஆர். ரஹ்மான் தொடர்பாகவும் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Rahman

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ படைப்புகளால் மக்களுக்கு இன்பச் சாமரம் வீசும் கலைஞர்கள் இங்கு இருப்பது தமிழ் சினிமாவின் வரம்.  அதிலும் தமிழ் சினிமாவை சிரசிலேந்தி பாரெங்கும் பரப்பும் திறன்மிகு நாயகர்கள் வாய்த்திருப்பது வரத்திலும் வரம் அப்படியான வரத்திலும் வரமான ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர்.ரஹ்மானும், ஆர். பார்த்திபனும் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்கி நம் முன் விருந்து படைக்கின்றனர்.

மேலும் படிக்க | விக்ரம் பிரபுவின் டாணாக்காரன் - திரை விமர்சனம்

இரவின் நிழல் என்ற அப்படத்தை என்னைக் காணச் செய்த பார்த்திபனுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மனதை கொள்ளை கொள்ளும் நிழலைக் கண்டு நிறைந்தேன். அப்படைப்பின் இசை நாயகனின் பயணத்தைக் கொண்டாடும் விதமாக மே 1ஆம் தேதி விழா தீவுத்திடலில் நடக்கிறது.

Iravin Nizhal

என் சார்பாக திரைத்துறையினர் அனைவரையும் அழைக்கிறேன். வாருங்கள். நீங்கள் கலந்துகொள்வதே இக்கலைஞர்களைக் கவுரவிப்பதற்கும் பெருமைப்படுத்துவதற்கும் சமம். வந்து கலந்து இக்கலைஞர்களின் பணியை பெருமிதம் கொள்ளச் செய்வோம்.

மேலும் படிக்க | பனிப்பிரதேசத்தில் வாழும் டைனோசர்கள்.! ஜூன்-10ல் ரிலீஸாகிறது ‘ஜூராஸிக் வேர்ல்டு: டொமினியன்’

மே 1 திரைத்துறையினர் அனைவரும் கலந்துகொண்டு திருவிழாவாக அவ்விழா அமையச் செய்ய மூத்த கலைஞன் என்ற முறையிலும், தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் புரொடியூசர்ஸ் அசோசியேசன் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News