பொன்னியின் செல்வன், காந்தாரா இந்து மதத்துடையது - கங்கனா ரணாவத்

பொன்னியின் செல்வன், காந்தாரா படத்தில் இந்து மத தன்மைகளை பார்வையாளர்களை தொடர்புப்படுத்திக்கொண்டதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 30, 2022, 08:29 AM IST
  • பொன்னியின் செல்வன், காந்தாரா படங்கள் வரவேற்பை பெற்றன
  • காந்தாரா படம் தமிழிலும் ஹிட்டடித்துள்ளது
  • இரு படங்கள் தொடர்பாக கங்கனா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Trending Photos

பொன்னியின் செல்வன், காந்தாரா இந்து மதத்துடையது - கங்கனா ரணாவத் title=

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படமும், ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் காந்தாரா படமும் அண்மையில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. பொன்னியின் செல்வன் சோழர்களின் பெருமையை கூறும்விதமாகவும், காந்தாரா படம் நில அரசியலை மையமாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு படங்களுக்கும் இந்திய அளவில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம், ராஜராஜ சோழனை இந்துவாக்கிவிட்டார்கள் என வெற்றிமாறன் பேசியது பொன்னியின் செல்வன் விஷயத்தில் விவாதத்தை கிளப்பியது. அதேபோல் காந்தாரா படத்தின் இயக்குநரிடம் தற்போது பழங்குடி மக்களுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் அளித்த பதிலும் விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன், காந்தாரா படங்களில் பார்வையாளர்கள் இந்து மத தன்மையை ஒப்பிட்டு பார்த்தார்கள் என நடிகை கங்கனா ரணாவத் தற்போது கூறியிருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுதொடர்பாக பேசிய அவர், “தென்னிந்திய திரைப்படங்களான 'பொன்னியின் செல்வன் பாகம் 1', 'காந்தாரா' போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் பாலிவுட் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எடுபடவில்லை. தற்போது வெற்றியடையும் படங்கள் அனைத்தும் இந்தியத் தன்மை உடையவை.

Ponniyin selvan

'காந்தாரா' படத்தை எடுத்துக்கொண்டால் அது ஒரு நுண்ணிய அளவில் பக்தி, ஆன்மிகத்துடன் தொடர்புடையது. 'பொன்னியின் செல்வன்' சோழர்களைப் பற்றியது. பார்வையாளர்கள் இந்து மதத் தன்மைகளையும் மதிப்புகளையும் 'காந்தாரா', 'பொன்னியின் செல்வன்' படங்களில் தொடர்புப்படுத்திகொண்டார்கள். மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தால், பாலிவுட் நம் கலாசாரத்திலிருந்து விலகிச் செல்கிறது. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் பாலிவுட் படங்களில் இருக்கிறது. மக்கள் இனி அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது என்று நான் நினைக்கிறேன்.

Kantara

நெப்போட்டிசம் இன்னமும் குறையவில்லை. ஆனால், நல்ல விஷயம் என்னவென்றால், மக்கள் இப்போது விழிப்புடன் இருக்கிறார்கள். 'இனி இது வேலைக்கு ஆகாது' என  இப்போது சொல்கிறார்கள். இனியும் இந்த நடிகர்களை ரோல் மாடல்களாக முன்னிறுத்த தேவையில்லை என சாமானிய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நாம் ஏன் ஸ்ரீராமரையோ,அப்துல் கலாமையோ முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என அவர்கள் கருதுகிறார்கள்” என்றார்.

மேலும் படிக்க | மருத்துவமனையில் நடிகை சமந்தா; அரிய வகை தோல் நோயால் பாதிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News