சுதந்திர தினத்தன்று அட்லி - ஷாருக்கான் படத்தின் அறிவிப்பு?

2018 ஆம் ஆண்டு ஷாருக்கான் அனுஷ்கா சர்மா இணைந்து நடித்த ஜீரோ படம் வெளியானது.  மிகப்பெரிய பொருட்செலவில் உருவான படம் சரியாக மக்கள் மத்தியில் சென்றடையவில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 7, 2021, 12:53 PM IST
சுதந்திர தினத்தன்று அட்லி - ஷாருக்கான் படத்தின் அறிவிப்பு?  title=

அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

2018 ஆம் ஆண்டு ஷாருக்கான் அனுஷ்கா சர்மா இணைந்து நடித்த ஜீரோ படம் வெளியானது.  மிகப்பெரிய பொருட்செலவில் உருவான படம் சரியாக மக்கள் மத்தியில் சென்றடையவில்லை.  இதற்குப் பின் படங்கள் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார் ஷாருக் கான்.  2019ஆம் ஆண்டு டிசைனில் வெளியான லயன் கிங் என்ற படத்திற்கு டப்பிங் பேசினார்.  அதற்குப் பின் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இன்று வரை நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.  

ALSO READ | ரசிகர்களிடம் கலாய் வாங்கிய துர்கா செகண்ட் லுக்

விஜய்யை வைத்து தெறி,மெர்சல் , பிகில் என்று அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த அட்லி அதற்குப்பின் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் கதைசொல்லி ஓகே செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.  தற்போது இந்தக் கூட்டணி உறுதியாகி இப்படம் முழுக்க துபாயில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஷாருக் கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் பாலிவுட் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன.  

இந்தப்படம் உறுதியாகும் பட்சத்தில் தன் பட ஹீரோக்களை மாஸாக காட்டும் அட்லி நீண்ட வருடங்களாக ஷாருக் கான் படத்திற்காக காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு விருந்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நாட்கள் மொத்தம் 180 நாட்கள் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 6 மாத காலம் ஷூட்டிங் என்பதால் இந்த படம் ரிலீஸாக எப்படியும் இன்னும் 2 வருடங்கள் ஆகிவிடும் என சொல்லப்படுகிறது. மேலும் இதில் ஷாருக்கானுக்கு இரண்டு வேடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 

ALSO READ | AV33: 13 வருடங்களுக்கு பின் இணையும் ஹரி – ஜி.வி. பிரகாஷ் கூட்டணி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News