அரசியல்வாதிகள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை அனைவருமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். ஆனால் அதில் குறிப்பிட்ட சில பேர் மட்டுமே அவர்களது சமூக வலைதளங்களை அவர்களே பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் அட்மின் மூலமே பதிவேற்றி வருகின்றனர். அந்த வகையில் தனது சமூக வலைத்தள பக்கங்களை அவரே பார்த்துக் கொள்பவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ்.
கைதி (Kaithi) படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ் (Arjun Das). இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று புகழ் பெற்றார். அதிலும் குறிப்பாக அவரது கனமான குரலில் அவர் பேசிய வசனங்கள் அனைத்தும் ஹிட் கிடைத்தன. கைதி படத்தில் அர்ஜுன் தாஸ் பேசிய "இவன் தலையை கொண்டு வருபவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் ரா" என்ற வசனம் இன்றுவரை புகழ் பெற்றுள்ளது.
ALSO READ | Vikram Movie Update: விக்ரம் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்
பின்பு மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார். அர்ஜுன் தாஸ் நடிப்பில் 2014 ஆம் ஆண்டிலேயே வெளிவர வேண்டிய அந்தகாரம் திரைப்படம் பணப் பிரச்சனையால் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளிவந்தது. இந்தப் படமும் அர்ஜுன் தாஸ் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அர்ஜுன் தாஸ் ரசிகர்களின் கேள்விக்கு அவ்வபோது பதிலளித்து வருகிறார். அதில் ரசிகர் ஒருவர் 'தல எனக்கு ஒரு ஹாய் சொல்லுவீங்களா' என்று கேட்டதற்கு, நான் முடிந்தவரை அனைவருக்கும் பதில் அளிக்க விரும்புகிறேன். ரசிகர்களுக்கு பதில் சொல்வதில் எந்த ஏற்றத்தாழ்வும் பார்ப்பதில்லை என்று பதிலளித்துள்ளார் அர்ஜுன் தாஸ். இதேபோல் கடந்த மாதம் உங்களுடைய குரலுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளீர்களா? என்ற கேள்விக்கு 'நிறைய முறை நடந்துள்ளது' என்று பதிலளித்தார்.
தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ்.
ALSO READ | விஜயின் மாஸ்டர் படத்தின் டெலிடட் காட்சிகளுக்கு அதிரடியான வரவேற்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR