அனுஷ்காவுக்கு திருமணமா? அதிர்ச்சியில் பிரபாஸ் ரசிகர்கள்!

பிரபாஸ் மற்றும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்வதாக பல வதந்திகள் கிளம்பி வந்த வண்ணம் உள்ளது.

Last Updated : Feb 9, 2018, 01:26 PM IST
அனுஷ்காவுக்கு திருமணமா? அதிர்ச்சியில் பிரபாஸ் ரசிகர்கள்!  title=

பாகுபலி-2 படத்துக்குப் பிறகு அனுஷ்கா 'பாகமதி' என்னும் படத்திலும் பிரபாஸ் சாஹோ என்ற படத்திதிலும்  நடித்துள்ளனர். 

>பிரபாஸ் மற்றும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்வதாக பல வதந்திகள் கிளம்பி வந்த வண்ணம் உள்ளது.

>பத்திரிகையையாளர்கள் அனுஷ்காவிடம் இது பற்றி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவரும் இல்லை என மறுத்து வருகிறார். 

>இந்நிலையில், தற்போது பாக்மதி படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் அனுஷ்கா பங்கேற்றார்.

>அப்போது திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது:- எனது திருமணத்தை நான் தள்ளிப்போடவில்லை. எனக்கு குழந்தைகள் பிடிக்கும். எனவே விரைவில் திருமணம் செய்துகொள்வேன். 

அதற்காக உடனடியாக திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாக அர்த்தம் இல்லை. திருமணம் பற்றி முடிவு எடுத்ததும் அதைப் பற்றி முறையாக அறிவிப்பேன் என்றார்.

Trending News