அனுஷ்காவிற்கு இந்த மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனுஷ்கா ஷர்மா, விராட் கோலிக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது. அனுஷ்கா சர்மா 2021 ஜனவரி 11 அன்று மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அனுஷ்கா (Anushka Sharma) கர்பமாக இருக்கிறார் என்கிற செய்தியை லாக்டவுனில்தான் அறிவித்தனர். இதனால் வீட்டிற்குள்ளேயே பயந்து முடங்கியிருந்ததாகவும் அந்த சமயத்தில் கணவர் விராட்தான் தன்னை முழுமையாக கவனித்துக்கொண்டார் என அனுஷ்கா இந்த மாத வோக் இந்தியா இதழில் நேர்காணல் அளித்துள்ளார். அதோடு நேர்காணலுக்காக அவர் எடுத்த அட்டைப் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலானது.
ALSO READ | ‘நீங்கள் அற்புதமான பெற்றோர்களாக இருப்பீர்கள்’- Virat, Anushka-வை வாழ்த்திய PM Modi!!
இந்த தம்பதிகள் தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையை பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாகக் கூறியுள்ளார். அதோடு அனுஷ்கா தன் ஆரோக்கியத்திலும், கருவில் இருக்கும் குழந்தையையும் இப்போதிலிருந்தே ஆரோக்கியமாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகையும் விராட் கோலியின் (Viral Kohli) மனைவியுமான அனுஷ்கா சர்மா, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்தவகையில் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா தம்பதியினருக்கு இன்று பிரபகல் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. இஷு தொடர்பாக விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
— Virat Kohli (@imVkohli) January 11, 2021
ALSO READ | அன்புக்கு அப்பா, ஆட்டத்துக்கு விராட் கோலி என்று கூறுகிறாராம் இந்த cricketer-ன் மகன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR