Animal OTT: அனிமல் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

Animal OTT: ரன்பீர் கபூர் நடப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான அனிமல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.    

Written by - RK Spark | Last Updated : Jan 15, 2024, 10:39 AM IST
  • அனிமல் படம் கடந்த மாதம் வெளியானது.
  • ரன்பீர் கபூர் நடித்து இருந்தார்.
  • சந்தீப் ரெட்டி படத்தை இயக்கி உள்ளார்.
Animal OTT: அனிமல் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்! title=

Animal OTT: ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் கூட்டணியில் உருவான அதிரடி ஆக்சன் படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.  படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே சில சர்ச்சைகளை எதிர்கொண்ட போதிலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அடித்தது.  இந்நிலையில், அனிமல் படம் ஜனவரி 26 முதல் Netflixல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.  சந்தீப் ரெட்டி வங்கா எழுதி இயக்கிய இப்படம், ஒரு தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையிலான உறவை பற்றி பேசுகிறது. கடந்த மாதம் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியானது. அனில் கபூர் உணர்ச்சி ரீதியாக நம்பமுடியாத ஒரு தந்தையாக நடித்து இருந்தா. ரன்பீர் கபூர் கோபமான மகனாக நடித்து இருண்டஹார்.  

மேலும் படிக்க | Pongal 2024 Movies: பொங்கலன்று ஒளிபரப்பாகும் புதுப்படங்கள்! எந்த சேனலில் எதை பார்க்கலாம்?

மேலும் பாபி தியோல், திரிப்தி திம்ரி, சாரு சங்கர், பப்லு பிருத்விராஜ், சக்தி கபூர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி-சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் பேனரின் கீழ் பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, கிரிஷன் குமார் மற்றும் முராத் கெதானி ஆகியோரால் படம் தயாரிக்கப்பட்டது.  சந்தீப் வாங்காவின் அனிமல் திரைப்படம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது. தற்போது ஓடிடியில் புதிய சாதனை செய்ய தயாராக உள்ளது.  அனிமல் படம் ஒரு பண்டிகை தினத்தில் வெளியாகவில்லை என்றாலும் வசூலில் சாதனை படைத்தது.  இது ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் 2023ல் அதிக வசூல் செய்த மூன்றாவது இந்தியத் திரைப்படம் மற்றும் ஐந்தாவது அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படம், மேலும் அதிக வசூல் செய்த ஏ ரேட்டட் இந்திய திரைப்படம் அனிமல் ஆகும். அனிமல் படம் நெட்பிலிக்ஸ் தளத்தில்  ஜனவரி 15 அன்று வெளியாக இருந்தது.  பின்பு, சில காரணங்களால் ஜனவரி 26 அன்று வெளியாக உள்ளது.  

முன்னதாக ஒரு நேர்காணலில், படத்தின் தியேட்டர் பதிப்பில் இருந்து நீக்கி உள்ள சில காட்சிகளை ஓடிடியில் சேர்க்க உள்ளதாக இயக்குனர் சந்தீப் ரெட்டி குறிப்பிட்டு இருந்தார்.  இருப்பினும், Netflix அதன் சமீபத்திய விதிகளின் படம் சென்சார் செய்யப்பட்ட என ஒரு காட்சிகளையும் படத்தில் சேர்க்கமாட்டோம் என்று கூறியது. எனவே, படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இடம் பெறுமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.  அனிமல் படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்றாலும், சந்தீப் ரெட்டி வங்கா அதன் ஓடிடி வெர்சனில் கூடுதல் காட்சிகளைச் சேர்க்க திட்டமிட்டார். ஒரு நேர்காணலில், “1-2 காட்சிகளில் சில சிக்கல்கள் இருந்ததால் அதனை தியேட்டர் வெர்சனில் பயன்படுத்த முடியவில்லை. ஒரே டேக்கில் இருந்து வித்தியாசமான மற்றும் இன்னும் சில காட்சிகளைப் பயன்படுத்துகிறேன். நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், நான் 3 மணிநேரம் 21 நிமிடங்களுக்குப் பதிலாக 3 மணிநேரம் 30 நிமிடங்களை விட்டிருக்க வேண்டும். அந்த 8-9 நிமிடங்களை நான் ஏன் தூக்கினேன் என்று தெரியவில்லை. இப்போது, ​​நான் அந்த 5-6 நிமிடங்களை கூடுதலாகப் பயன்படுத்த உள்ளேன்" என்று கூறி இருந்தார்.

மேலும் படிக்க | பிக்பாஸ்7:ரன்னர் அப் பட்டத்தை வென்ற மணிச்சந்திரா-மாயா! மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News