அமேசான் பிரைமில் இந்த சூப்பர் ஹிட் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Amazon Prime வீடியோவில் பல சூப்பர் ஹிட் படங்கள் நிரைந்துள்ளன. அவற்றில் இந்த தீபாவளி பண்டிகை விடுமுறையில் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Nov 9, 2023, 09:10 AM IST
  • அமேசான் பிரைமில் பல ஹிட் படங்கள் உள்ளன.
  • குறிப்பாக பாலிவுட் படங்கள் அதிகம் உள்ளன.
  • சில படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது.
அமேசான் பிரைமில் இந்த சூப்பர் ஹிட் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க! title=

பொதுவாக திரையரங்குகளில் படம் பார்ப்பது பலருக்கும் பிடித்த விஷயம்.  ஆனால், அலுவலக பணி, வீட்டில் இருக்கும் பிற வேலைகள் காரணமாக பலரால் செல்ல முடிவதில்லை.  அப்படிபட்ட நேரத்தில் ஓடிடி பெரிதும் உதவிகரமாக இருக்கும்  நினைத்த நேரத்தில் நினைத்த படங்களை இணையத்தில் பார்க்கலாம்.  திரைப்பட ஆர்வலர்கள் தங்கள் வசதிக்கேற்ப, எங்கு இருந்தும் படங்களை பார்க்க முடியும்.  இந்த பண்டிகை கால விடுமுறையில் Amazon Prime வீடியோவில் நீங்கள் பார்க்க வேண்டிய சில சிறந்த படங்களை பற்றி பார்ப்போம்.

பத்மாவத் (Padmaavat)

திரையரங்குகளில் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வெளியான பத்மாவத் படத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் ஹைதாரி, ஜிம் சர்ப், அனுப்ரியா கோயங்கா, ராசா முராத், மணீஷ் வாத்வா ஆகியோர் நடித்துள்ளனர்.  வரலாற்று காவியமாக உருவாகி உள்ள இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார்.  இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட் என்றே சொல்லலாம். பத்மாவத் ராணி பத்மாவதியின் வாழ்க்கை மற்றும் ராஜ்யத்திற்காக அவர் செய்த தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட படம் ஆகும்.  இரக்கமற்ற அலாவுதீன் கல்ஜியாக ரன்வீர் சிங் இந்த படத்தில் தனது நடிப்பை நிரூபித்து இருப்பார்.

மேலும் படிக்க | தமயந்தி தான் ஓனர் என்ற உண்மை தெரிய வந்தது! குடும்பமா? மெஸ்ஸா? நளதமயந்தி சீரியல்

பதான் (Pathaan)

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா, அசுதோஷ் ராணா, சல்மான் கான் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பதான்.  அதிரடி ஆக்சன் படமாக உருவான பதான் படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை முறியடித்தது.  நீண்ட நாட்களுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. இப்படத்தில் தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.  ஸ்பை திரில்லர் யுனிவர்ஸின் ஒருபகுதியாக இந்த படம் இருந்தது.

ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி (Rocky Aur Rani Kii Prem Kahaani) 

ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஷபானா ஆஸ்மி, ஜெயா பச்சன், டோட்டா ராய் சவுத்ரி, அஞ்சலி சட்டர்ஜி, அமீர் பஷீர், திஜோரி ரந்தாவா, க்ஷிதி ஜோக், அஞ்சலி ஆனந்த், நமித் தாஸ், ஷீபா அகர்வால் ஆகியோர் நடித்துள்ள ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்தை கரண் ஜோஹர் இயக்கியுள்ளார்.  முழுக்க முழுக்க நகைச்சுவை கொண்ட குடும்ப படமாக உருவாகி உள்ளது.  இந்த படத்தின் மூலம் 7 ​​ஆண்டுகளுக்குப் பிறகு கரண் ஜோஹர் இயக்குனராக மீண்டும் அறிமுகமாகி உள்ளார். நீங்கள் பாலிவுட் திரைப்படங்களை விரும்பி பார்ப்பவராக இருந்தால் இந்த படம் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும். 

தப்பாட் (Thappad)

தனது வழக்கமான படங்களில் இருந்து புதிய விஷயங்களை தேடி சென்று நடிக்கும் நடிகர்களில் டாப்ஸி பன்னுவும் ஒருவர். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தப்பாட். இந்த திரைப்படம் திருமணமான தம்பதியரைப் பற்றியது. ஒரு பார்ட்டியில் கணவன் தனது மனைவியை எல்லோர் முன்னிலையிலும் அறைந்துவிடுகிறார்.  பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதை.  சுயமரியாதை மற்றும் சுய மதிப்பு பற்றி இந்த படம் முன்வைக்கிறது. டாப்ஸி பன்னு, பாவில் குலாட்டி, குமுத் மிஸ்ரா, ரத்னா பதக் ஷா, மாயா சராவ், தன்வி ஆஸ்மி, தியா மிர்சா, ராம் கபூர், அங்கூர் ரதீ, மானவ் கவுல் நடிக்க அனுபவ் சின்ஹா இந்த படத்தை இயக்கி உள்ளார்.

மேலும் படிக்க | கமலுக்கு உள்குத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதீப்! என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News