சாமி படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட்-சோகத்தில் பிரபல நடிகர்..!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ஓஎம்ஜி 2 படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்தது. இது குறித்து அவர் பேசியுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 13, 2023, 10:16 AM IST
  • அக்‌ஷய் குமார் ஓ.எம்.ஜி 2 எனும் படத்தில் நடித்துள்ளார்.
  • இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
  • இதற்கு அவர் சோகம் தெரிவித்துள்ளார்.
சாமி படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட்-சோகத்தில் பிரபல நடிகர்..! title=

இந்தி திரையுலகின் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், அக்‌ஷய் குமார். இவரை தமிழ் ரசிகர்கள் சிலருக்கும் மிகவும் பிடிக்கும். இவர் நடிப்பில் ஓ.எம்.ஜி 2 என்ற பெயரில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். 

ஓ.எம்.ஜி-2:

பிரபல பாலிவுட் இயக்குநர் அமித் ராய் இயக்கத்தில் வெளியாகியுள்ள பட, ஓ.எம்.ஜி 2. இந்த படம், பாலியல் கல்வி குறித்து போதிக்கும் வகையிலான கதையாக உருவக்கப்பட்டுள்ளது. இதில், சிவபெருமானின் அதி பயங்கர பக்தன் கதாப்பாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். சிவனின் தூதுவராக பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். படம், நேற்று முன்தினம் (ஆகஸ்டு 11) வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படத்தில், இந்திய பள்ளிகளில் பாலியல் கல்வியின் போதனை எப்படியுள்ளது என்பதை காண்பித்திருக்கின்றனர்.  

மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு ரஜினி ரசிகராக மாறிய விஜய்யின் மகன்..!

ஏ சான்றிதழ்..

ஒஎம்ஜி 2 திரைப்படம் கடவுள் குறித்த கதையாக இருந்தாலும், பாலியல் குறித்த செய்திகளையும் படிப்பினைகளையும் போதிப்பதனால், இதற்கு தனிக்கை துறையினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்பதற்காக இந்த ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பட ரிலீஸின் போது அக்‌ஷய் குமார் திரையரங்கிற்கு சென்று ரசிகர்களை சந்தித்தார். அப்போது, படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறித்து பேசினார். ”டீன் வயதில் இருக்கும் இளைஞர்களுக்காக முதன் முதலாக எடுக்கப்பட்டுள்ள பாலியல் விழிப்புணர்வு குறித்த படம் இது. ஆனால் இதற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது ஏமாற்றம் அளித்துள்ளது..” என்று பேசினார், மேலும், படத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் அவர் நன்றியும் தெரிவித்தார். படம், யு/ஏ சான்றிதழ் வாங்கியிருந்தால் இன்னும் நிறைய பேர் வந்து படத்தை பார்த்திருப்பர் என அவர் தெரிவித்தார். 

தொடர்கதை:

2012ஆம் ஆண்டு உமேஷ் சுக்லா இயக்கத்தில் வெளியாகியிருந்த ஓஎம்ஜி-ஓ மை காட் படத்தின் அடுத்த கதையாக வெளிவந்த படம்தான், ஓஎம்ஜி. இந்த படத்திலும் அக்‌ஷய் குமார்தான் ஹீரோவாக நடித்திருப்பார். அனால், 2012ஆம் ஆண்டு வெளியான படத்தை விட, தற்போதுவ் வெளியாகியுள்ள ஓஎம்ஜி 2 திரைப்படம் மிகவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். படம் பாலிவுட் உலகில் சக்கை போடு போட்டு வருகிறது. 

தமிழ் ரீ-மேக் படங்களில் அக்ஷய் குமார்:

நடிகர் அக்ஷய் குமார், தமிழில் வெளியாகி ஹிட் அடுத்த படங்களின் இந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி தமிழில் ஹிட் ஆன ‘காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்கான லக்ஷமி எனும் படத்தில் நடித்திருந்தார். ஆனால், இப்படம் ரசிகர்களின் வரவேற்பினை பெறவில்லை. இதையடுத்து, சைக்கோ த்ரில்லர் படமாக தமிழில் வெளியான ‘ராட்சசன்’ இந்தி ரீ-மேக்கில் நடித்தார். இப்படம் கட்புட்லி எனும் பெயரில் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யா கேமியோ கதாப்பாத்திரத்தில் வருகிறார். 

மேலும் படிக்க | நெல்சன் to வெங்கட் பிரபு..தோல்விக்கு பிறகு மாஸ் கம்-பேக் கொடுத்த தமிழ் இயக்குநர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News