ஓடிடி-யில் யாராலும் தொடமுடியாத புதிய சாதனை படைத்த வலிமை!

அஜித் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி வெற்றிநடைபோட்ட வலிமை படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி புதிய சாதனை படைத்து இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Mar 27, 2022, 08:23 PM IST
  • வலிமை ஓடிடியிலும் சாதனை.
  • 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்கை கடந்து உள்ளது.
  • அடுத்ததாக ak61 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஓடிடி-யில் யாராலும் தொடமுடியாத புதிய சாதனை படைத்த வலிமை! title=

சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான மிகப்பிரம்மாண்டமான படமான வலிமை ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்ததோடு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.  ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க | ‘ரஜினி-169’ படத்தின் டைட்டில் இதுவா?!

இப்படத்தை திரையில் பார்த்து ரசித்த ரசிகர்கள் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.  இப்படம் ஜீ5 ஓடிடி இயங்குதளத்தில் வெளியிடப்படும் என்று படக்குழுவும் ஏற்கனவே அறிவித்து இருந்தது.  அதனையடுத்து படக்குழு அறிவித்தபடியே கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச்-25) ஜீ இயங்குதளத்தில் வெளியிட்டது.  இந்த ஜீ5 ஓடிடி இயங்குதளத்தில் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த வலிமை திரைப்படம், சில நிமிடங்களில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்கை கடந்து இதுவரை எந்த இயங்குதளத்தில், எந்த படமும் பெற்றிடாத சாதனையை படைத்து இருக்கிறது.

வலிமை படம் ஓடிடி பிளாட்ஃபார்மில் சிறந்த சாதனையை படைத்துள்ளது.  இதுவரை ஜீ5 இயங்குதளத்தில் வெளியான அனைத்து படங்களின் சாதனைகளையும் வலிமை படம் முறியடித்து இருக்கிறது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, விரும்பப்பட்ட இந்த வலிமை திரைப்படம் பல மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு அனைத்து மொழியிலும் இதேபோன்ற வரவேற்பை பெற்று சாதனை செய்துள்ளது. இந்த திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு முன்னரே ஜீ5 ஸ்ட்ரீமிங்கை கொண்டாடும் வகையில் இப்படத்திற்கு 10,000 சதுர அடி அளவிலான மிகப்பெரிய போஸ்டரை வெளியிட்டது.  இது இந்திய ஸ்ட்ரீமிங் வரலாற்றிலேயே எந்த படத்தாலும் முறியடிக்க முடியாத சாதனையை இப்படம் முறியடித்துள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ‘மங்காத்தா’வுல முதல்ல நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News