‘வேலைக்காரன்’ படத்தின் காப்பியா அஜித்- 62 ?!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 26, 2022, 12:25 PM IST
  • அஜித் 61: போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கவுள்ளார்
  • அஜித் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்
  • அஜித் 62 திரைப்படத்தின் கதை குறித்து புதிய தகவல்
‘வேலைக்காரன்’ படத்தின் காப்பியா அஜித்- 62 ?! title=

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளது. அஜித்தின் 61ஆவது படமான இதை போனிகபூர் தயாரிக்கவுள்ளார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமையைத் தொடர்ந்து அஜித்தின் இந்தப் படத்தை அவர் தயாரிக்கவுள்ளார்.  ஏப்ரலில் இதன் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன. வலிமையைப்போல அல்லாமல் இதன் படப்பிடிப்பு அதிவிரைவில் முடிக்கப்பட்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள விக்னேஷ் சிவன் அஜித்துடன் இணைவது இதுவே முதல் முறை. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

                                                             Ajith

இந்த நிலையில் அஜித்- 62 படத்தின் கதை குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. அந்த வகையில், இப்படம் உணவுப்பொருட்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் அரசியல் பற்றிப் பேசவுள்ளதாம். தரமான உணவுப் பொருட்கள் மக்களிடம் சென்று சேர்க்க விரும்பும் அஜித்தை, கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்ப்பதே இப்படத்தின் ஒன்லைன் எனச் சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க | அஜித் 61 படத்தின் தலைப்பு இதுவா?! பாரதியை ஃபாலோ செய்யும் அஜித்

முழு நீள ஆக்சன் படமாகவும் இது உருவாகவுள்ளதாம். இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்- நயன்தாரா நடித்த வேலைக்காரனில் உணவுப் பொருள் கலப்படம் குறித்துப் பேசப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட அப்படம் மக்களிடம் நல்ல கவனத்தையும் பெற்றது. வேலைக்காரன் படம்  வெளியான சமயத்தில் இயக்குநர் மோகன்ராஜா மற்றும்  சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டி ட்வீட் போட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

தற்போது இதே பாணியில் உருவாகவுள்ளதாகச் சொல்லப்படும் அஜித் 62 படத்தின் திரைக்கதை, அதிலிருந்து மாறுபடுமா, இதில் புதிதாக அல்லது கூடுதலாக எவற்றையெல்லாம் சொல்லப்போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | வலிமை படம் காப்பியா?! இணையத்தில் பரவும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News