அஜித்தை டாப் ஹீரோவாக மாற்றிய 10 மெகா ஹிட் படங்கள் - பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!

Actor Ajith 52nd Birthday: அஜித் தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரை நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திய டாப் 10 படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - Sudharsan G | Last Updated : Apr 30, 2023, 07:02 PM IST
  • அஜித் நடித்து இதுவரை 61 படங்கள் வெளிவந்துள்ளன.
  • கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் நல்ல வசூலை குவித்தது.
  • அஜித் அமராவதி படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அஜித்தை டாப் ஹீரோவாக மாற்றிய 10 மெகா ஹிட் படங்கள் - பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு! title=

Actor Ajith 52nd Birthday: ஒரு நடிகனை பொருத்தவரை வெற்றி, தோல்வி  என்பது சகஜமான ஒன்று. ஆனால் ஒரு நடிகன் சில தோல்வி படங்களை கொடுத்த பிறகு அதில் இருந்து மீண்டு வந்து வெற்றி பாதைக்கு திரும்பி நட்சத்திர அந்தஸ்தை பெறுவது என்பது முழுக்க முழுக்க அவரின் திறமை மட்டுமே என்று சொல்லலாம். 

அப்படி தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் அஜித்தும் ஒருவர். சுமார் 61 படங்களில் நடித்திருக்கும் அஜித் தனது 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அந்த வகையில் அஜித்தை நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திய டாப் 10 படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

அஜித்தை ஆசையோடு வரவேற்ற "ஆசை"

1993ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானாலும், 'ஆசை' படம் வரை அஜித் ஒரு commerical ஹீரோவாக கருதப்படவில்லை. உண்மையில், இந்த இரண்டு படங்களுக்கிடையில், அவர் பாசமலர்கள், பவித்ரா மற்றும் ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களில் துணை வேடங்கள் என்று சொல்லக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் ஆசையில் படத்தில் தான் ஜீவா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார் அஜித். இந்தப் படம் அஜித்துக்கு ஒரு சாக்லேட் பாய் இமேஜை பெற்று தந்தது

Ajith

கை கொடுத்த "காதல் கோட்டை"

ஆசை படம் வெற்றி பெற்றாலும் அந்தப் புகழ் அஜித்துக்கு சேரவில்லை. மாறாக அந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சென்றது. ஆனால் காதல் கோட்டை படத்தின் மூலம் அஜீத் மக்கள் மத்தியில் அந்த புகழை பெற்றார்.  தான் பார்க்காத ஒரு பெண்ணோடு தொலை தூர உறவில் இருக்கும் ஓர்  இளைஞனாக, சூர்யா என்ற கதாபாத்திரத்தில், அஜீத் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தினார்!

முக்கியமான இடத்தில் வெளியான 'காதல் மன்னன்'

காதல் கோட்டை படத்தின் வெற்றியால், பிசியான  ஹீரோவாக மாறிய அஜித், அரை டஜன் படங்களில் கையெழுத்திட்டார். ஆனால், 'நேசம்', 'ராசி', 'உல்லாசம்', 'பகைவன்' மற்றும் 'ரெட்டை ஜடை வயசு' ஆகிய ஐந்து படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்தன. அதே ஆண்டில் வேறு எந்த ஹீரோவாக இருந்தாலும் அவரது கேரியர் முடிந்திருக்கும். ஆனால், சரண் இயக்கிய 'காதல் மன்னன்' படம் அவரை மறுபடியும் வெற்றி பாதைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து சரண் இயக்கத்தில் நடித்த 'அமர்க்களம்', 'அட்டகாசம்' போன்ற படங்களும் கை கொடுத்தன.

Ajith

வில்லத்தனமான அஜித்

காதல் மன்னனுக்குப் பிறகு, 'அவள் வருவாளா', 'உன்னை தேடி' போன்ற படங்கள் மூலமாக மறுபடியும் வெற்றி பெற்ற அஜித், காதல் பாத்திரங்களில் சைன் செய்த காலம் அது. அதிலிருந்து சற்று வித்தியாசமாக வில்லன் சாயலோடு டபுள் ஆக்சன் ரோலில் அஜித்தை பார்க்க முடிந்தது 'வாலி' படத்தில் தான் இந்த படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கி இருந்தார். தம்பி மனைவியை அடைய, வாய் பேச முடியாத அண்ணன் செய்யும் வேலைகளை வாலி படத்தின் கதையாக இருந்தது. அஜித் நடிப்பின் உச்சம் என்று இந்தப் படத்தை சொல்லிவிடலாம். மேலும் இந்த படம்தான் அவருக்கு சிறந்த நடிகருக்கான முதல் பிலிம் பேர் விருதை பெற்று தந்தது.

Ajith

மேலும் படிக்க | நாளை அஜித்தின் ஏகே 62 அறிவிப்பு? டைட்டில் இது தானா?

கேங்ஸ்டரான அஜித்

காதல் மற்றும் நடிப்பு சார்ந்த வேடங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருந்தார் அஜித். மேலும் தான்  ஒரு நட்சத்திரம் என்பதை நிரூபித்தார். அதே பாய்ச்சலோடு  தானும் மாஸ் ஹீரோ என்று நிரூபிக்க முடியுமா? நிச்சயமாக! ஏஆர் முருகதாஸின் முதல் படமான தீனாவில், "சக்தி" வாய்ந்த கேங்ஸ்டர் கதையில் நடித்திருந்தார் அஜித். தனது சொந்த அண்ணன் இடமிருந்து தனது காதலியை காப்பாற்றும் ஒரு கேங்ஸ்டர் ஆக அஜித் நடித்திருப்பார். அதுவரை சாக்லேட் பாயாக இருந்த அஜித் இந்த படம் வெற்றி பெற்றதை எடுத்து  மாஸ் ஹீரோவாக அறியப்பட்டார்.

Ajith

ஷ்டைலிஸ் பில்லா

தீனாவுக்குப் பிறகு, ஆக்‌ஷன்  சென்டிமென்ட் இரண்டையும் கொண்ட படங்களில் கவனம் செலுத்தினார். அந்த நேரத்தில்தான் 'வில்லன்', 'வரலாறு' போன்ற படங்கள் வெளியாகின. ஆனால் அந்தப் படங்கள் பேசப்படவில்லை. அதே சமகாலத்தில் தான் 'கில்லி', 'கஜினி', 'அந்நியன்' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தன. தொடர்ந்து அஜித்துக்கு நிச்சயமாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தலையின் நட்சத்திர அந்தஸ்து மங்கிவிட்டதா என பலரும் விமர்சனம் செய்தனர் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டைலிஷ் ஆன 'பில்லா'வாக களம் இறங்கினார். பில்லா படம் வேற லெவலில் ஹிட் ஆனது

மாஸ் காட்டிய மங்காத்தா

அஜித் தனது தனிப்பட்ட அடையாளத்தை தனது 50ஆவது படத்தில் காட்ட முடியுமா என்று கேள்வி அனைவர் மத்தியிலும்  எழுந்தது. ஏனென்றால் அப்போதுதான் 'ஏகன்', 'அசல்' போன்ற படங்கள் தோல்வியை கண்டன . ஆனால் அஜித் 'மங்காத்தா' படத்தின் மூலம் இந்த தோல்விகளை எல்லாம் தகர்த்துக் கொண்டு பீனிக்ஸ் பறவை போல வெளியே வந்தார். மங்காத்தா படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. கிரே shade கலந்த ஹீரோ கதாபாத்திரத்தில் அஜித் மாஸ் காட்டி இருப்பார்.

Ajith

வீரமான வீரம்

அடுத்ததாக 2015ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தை சொல்லலாம் இந்த படத்தில் அஜித் முற்றிலும் மாறுபட்ட ,கிராமத்து கதைக்களம் கொண்ட குடும்ப படத்தில் நடித்திருப்பார். செண்டிமெண்ட் காதல் ஆக்சன் நிறைந்த இந்த படமும் கமர்சியலாக வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவாவுக்கு அஜித் தொடர்ச்சியாக வாய்ப்பளித்துக் கொண்டே இருந்தார். 'வீரம்' 'வேதாளம்', 'விவேகம்', 'விசுவாசம்' என நீண்டு கொண்டே சென்றது. இவை தவிர ஏகே 63 படத்தையும் சிறுத்தை சிவா இயக்க இருப்பதாகவும் ஒரு தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 

நடிப்பின் உச்சம் நேர்கொண்ட பார்வை

அஜித் நடிப்பின் உச்சம் என நேர்கொண்ட பார்வை படத்தை சொல்லலாம். ஒரு கமர்சியல் ஹீரோ சோசியல் மெசேஜ் கொண்ட ஒரு படத்தில் நடிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அல்டிமேட் ஸ்டார் அதையும் சாத்தியப்படுத்தி காட்டினார். நேர்கொண்ட பார்வை ஹிந்தியில் மெகா ஹிட் ஆன பிங்க் என்ற  படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தன் ஸ்டைலில் அந்த படத்தில் நடித்து வேற லெவல் வெற்றி பெற செய்தார்.

மேலும் படிக்க | 'துணிவு' படைத்த மாபெரும் சாதனை... அஜித் படங்களிலேயே அதிக வசூல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News