நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நெல்சன் இப்படத்தினை இயக்க அனிருத் இசையமைக்கிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே, வில்லனாக செல்வராகவன் போன்றோர் நடிக்கின்றனர்.
விஜய்யின் 66 வது படமான தளபதி66 படத்தினைப் பற்றிய அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. தெலுங்கு சினிமாவில் முக்கிய இயக்குனரான வம்சி இந்த படத்தினை இயக்குகிறார். பொதுவாக ஒரு படத்தினை முடித்து விட்டு தான் தனது அடுத்த படத்தினை பற்றிய அறிவிப்பை வெளியிடும் விஜய், தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளிவந்துள்ளது.
தளபதி 66 படத்தின் பற்றிய அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளிவர தொடங்கின. இப்படத்தில் நடிக்க பாலிவுட் புகழ் கைரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மகேஷ்பாபுவின் மகளும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படம் ஒரு அப்பா மகளுக்கு இடையேயான நடக்கும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
#Thalapathy66... Sharing with you all an exciting update about my next film with The #Thalapathy @actorvijay Sir, Produced by #DilRaju garu & #Shirish garu under my home banner @SVC_official pic.twitter.com/R24UhFGNlW
— Vamshi Paidipally (@directorvamshi) September 26, 2021
கில்லி, போக்கிரி, சிவகாசி என்று தொடர்ச்சியாக விஜயுடன் சேர்ந்து நடித்த பிரகாஷ்ராஜ் 2009ஆம் ஆண்டு வெளிவந்த வில்லு திரைப்படத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் தளபதி66 படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் வம்சி இயக்கிய தோழா படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனால் தளபதி66 படத்திலும் பிரகாஷ் ராஜ் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தளபதி66 திரைப்படம் 2022ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ASLO READ நடிகர்களாக மாறி வெற்றி பெற்ற இயக்குனர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR