மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஃபேமிலி போட்டோஸ்

Sivakarthikeyan Family Photos Viral: நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டில் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 12, 2023, 12:29 PM IST
  • சிவாகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மகன் பிறந்தான்.
  • தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
  • ‘மாவீரன் ‘ திரைப்படம், வரும் வெள்ளிக்கிழமை அன்று (ஜூலை 14) வெளியாகிறது.
மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஃபேமிலி போட்டோஸ் title=

மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படங்கள்: சின்னத்திரையில் மிமிக்ரி, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்னால் சில விளம்பரங்களிலும், படங்களிலும்  தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபலமானார். இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக தற்போது வலம் வருகிறார். அந்தவகையில் தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கிறார்.  இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இப்படி அணைவருக்கும் பிடித்த நடிகராக தற்போது சிவகார்த்திகேயன் உள்ளார். 

குகன் தாஸ் பிறந்தநாள்

இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு தனது உறவினரான ஆர்த்தியை திருமணம் செய்த சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி சிவாகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்தான். தனது மகனுக்கு மறைந்த தனது தந்தை தாஸின் நினைவாக ’குகன் தாஸ்’ என பெயரிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். 

 மேலும் படிக்க | டிராமா போடும் முத்துப்பாண்டி.. கண்ணீருடன் சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த பரணி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

இந்த நிலையில் இன்று மகன் குகன் தாஸ் பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இன்று இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்பம். குகன் தாஸ் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அதில், “ஹேப்பி பர்த்டே தம்பி” என தனது சமூக வலைத்தளப்பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி குகன் தாஸ் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் தங்களின் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் பதிவிட்ட 30 நிமிடத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து இன்ஸ்டாகிராமில் படு வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் 'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘மாவீரன் ‘ திரைப்படம், வரும் வெள்ளிக்கிழமை அன்று (ஜூலை 14) வெளியாகிறது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் ‘மஹாவீரடு’ என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து அவர் நடித்து வரும் அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர் வெற்றிகளால் குறுகிய காலத்திலே முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பின்பு தயாரிப்பாளராகவும் மாறினார். மாவீரன் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் நிலையில் விரைவில் பாலிவுட் பக்கம் அறிமுகமாகவுள்ளார் எனத் தெரிகிறது.  

மேலும் படிக்க | Jailer audio launch: ஜெய்லர் படத்தின் ஆடியோ லான்ச் எப்போது? வெளியான தகவல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News