'உன் மார்பகம் பெரிதாக இல்லை'... நடிகையிடம் கூறிய பிக்பாஸ் போட்டியாளர் - புதிய சர்ச்சை

தனது மார்பகம் பெரிதாக இல்லை என்றும், மசாஜ் செய்து பெரிதாகினால் சினிமாவில் வாய்ப்பு தருவதாக, பிக்பாஸ் தொடரில் பங்கேற்றுள்ள இயக்குநர் கூறியதாக பிரபல நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 15, 2022, 10:02 AM IST
  • 5 நிமிடங்களுக்கு மேலாக எனது அந்தரங்க உறுப்பை அவர் பார்த்துக்கொண்டே இருந்தார் - நடிகை
  • என் மார்பக அளவு சினிமாவுக்கு ஏற்ற வகையில் இல்லை என அந்த இயக்குநர் கூறினார் - நடிகை
'உன் மார்பகம் பெரிதாக இல்லை'... நடிகையிடம் கூறிய பிக்பாஸ் போட்டியாளர் - புதிய சர்ச்சை title=

நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் சீசன் 16இல், பாலிவுட் இயக்குநர் சஜித் கான் பங்கெடுத்துள்ளார். இவர் மீது, MeeToo இயக்கத்தின்போது, பல்வேறு 10க்கும் மேற்பட்ட பெண்கள், பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.   

அவர் மீதான தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் (IFTDA)2018ஆம் ஆண்டில், ஓராண்டு சஸ்பெண்ட் செய்தது.  புகழ்பெற்ற 'ஹவுஸ்ஃபுல் 4' என்ற இந்தி திரைப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகுவதாக 2018ஆம் ஆண்டில் அவர் அறிவித்திருந்தார்.

இதனால், பிக்பாஸ் தொடரில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என கண்டனக் குரல்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக, அவரை பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேற்றும்படி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு டெல்லி மகளிர் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. 

மேலும் படிக்க | ஆணுறுப்பை காட்டி மார்க் போடச் சொன்னார் - பிக்பாஸ் போட்டியாளர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்!

தொடர்ந்து, சஜித் கானை பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேற்றும்படி பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவும் போர்க்கொடி தூக்கினார். மீ டூ இயக்கத்தில் சஜித் கான் மீது புகார் அளித்த 10 பெண்களில், ஷெர்லினும் ஒருவர். 

ஆனால், மற்றொருபுறம், சஜித் கானுக்கு ஆதரவு தெரிவித்து நடிகையும், மாடலுமான ராக்கி சாவந்த்  களமிறங்கி ஷெர்லின் சோப்ராவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். தற்போது, சஜித் கானை முன்வைத்து, ராக்கி சாவந்த் - ஷெர்லின் சோப்ரா மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில், சஜித் கானால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பாலிவுட் நடிகையும் தற்போது பொதுவெளியில் அறிவித்துள்ளார். சஜித் தன்னிடம் மிகவும் தரக்குறைவாக பேசியதாகவும், அருவறுக்கத்தக்க கேள்விகளை தன்னிடம் கேட்டதாகவும் நடிகை ஷீலா பிரியா சேத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து அவரை தூக்குங்கள் - மத்திய அமைச்சருக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை

இதுகுறித்து ஷீலா பிரியா சேத் கூறுகையில்,"2008ஆம் ஆண்டில்தான் இயக்குநர் சஜித் கானை முதல்முறையாக சந்தித்தேன். அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கும்படி அவரின் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அவரின் சில தவறான செயல்களால் அதனை திரும்பப் பெற்றுக்கொண்டேன். 

அவர் எனது அந்தரங்க உறுப்பை, 5 நிமிடங்களுக்கு மேலாக கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தார். பின்னர்,'நீ நிச்சயம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். உன்னுடைய மார்பகத்தின் அளவு பாலிவுட்டுக்கு ஏற்றளவில் இல்லை' என்றார். எனக்கு பகீரென இருந்தது. 

தொடர்ந்து, 'உன்னுடைய மார்ப்பக அளவை பெரிதாக சில எண்ணெய்கள் (தைலங்கள்) உள்ளன. அவற்றை பயன்படுத்தி, தினமும் மார்ப்பக்கத்தில் மசாஜ் செய்தால்தான் அவை பெரிதாகும். அப்போதுதான் உனக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கும்' என என்னிடம் பேசினார்" என்றார். 

மேலும் படிக்க | 'அந்த நடிகையின் ஆபாச படம் என்னிடம் உள்ளது...' - அவதூறு வழக்கு போட்ட மற்றொரு நடிகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News