தப்பா பேசுன செருப்பு பிஞ்சிடும் - பயில்வான் ரங்கநாதனை பீச்சில் பஞ்சராக்கிய நடிகை

நடிகை ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை திருவான்மியூரில் ஆவேசமாக திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 21, 2022, 06:27 PM IST
  • அனைவரையும் அவதூறாக பேசுபவர் பயில்வான் ரங்கநாதன்
  • இவர் மீது பாடகி சுசித்ரா புகார் அளித்திருந்தார்
  • இன்று காலை ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை ஆவேசமாக திட்டினார்
தப்பா பேசுன செருப்பு பிஞ்சிடும் - பயில்வான் ரங்கநாதனை பீச்சில் பஞ்சராக்கிய நடிகை title=

பத்திரிகையாளர் என தன்னைத் தானே கூறிக்கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் சினிமா நடிகைகள் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசுவதையும் பிழைப்பாக வைத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தான்கூறுவதுதான் உண்மை எனவும், தன்னை எதிர்த்து கேட்க எவருமே இல்லை  அல்லது எவருக்குமே தகுதி இல்லை எனவும் நினைத்துக்கொள்பவர். அதுமட்டுமின்றி தான் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருப்பவன். அதனால் தமிழ் சினிமா குறித்தும், அதில் பணியாற்றுபவர்கள் குறித்தும் தனக்கு அனைத்தும் தெரியும் என பொதுவெளியில் தம்பட்டம் அடித்து மலிவான விளம்பரம் தேடுபவர்.

ஆரம்பத்தில் அளவோடு பேசிய ரங்கநாதன் சமீபகாலமாக மிகவும் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும் பேசிவருகிறார். கோலிவுட்டில் யாருக்கேனும் விவாகரத்து நடந்தால், அந்த தம்பதிக்குள் என்ன நடந்தது என்றே தெரியாமல் அவர்கள் அருகில் இருந்ததுபோல் பேசுவார்.

அவரது பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். மேலும் சினிமாவின் மூத்த உறுப்பினர்களும், பத்திரிகையாளர்களும் அவரை கண்டித்து வைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

Bayilvan Ranganathan

இதற்கிடையே அவர் மீது பாடகி சுசித்ரா காவல் துறையில் புகாரும் அளித்தார். ஆனாலும் அவர் தனது வரம்பு மீறிய பேச்சை நிறுத்திக்கொள்ளவில்லை.

அந்தவகையில் இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் அரை நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாத வரம்பு மீறி பேசியிருந்தார். இந்தச் சூழலில், இன்று காலை திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் வாக்கிங் சென்றுகொண்டிருந்தார்.

Rekha Nair

அப்போது அதே பகுதியில் வாக்கிங் சென்ற ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை பார்த்து, “நான் என்ன உன் மனைவியா, குழந்தையா. எதற்காக அப்படி பேசுகிறாய். நான் நிர்வாணமாக நடித்தால் உனக்கு என்ன. தேவையில்லாமல் பேசக்கூடாது. சினிமாவில் நடிக்கும் நடிகைகள் குறித்து அவதூறாக பேசி அதில் வரும் காசில் வாழக்கூடாது. வயதுக்குலாம் மரியாதை கொடுக்கமாட்டேன். அசிங்கமா பேசுனா செருப்பு பிஞ்சிடும்” என ஆவேசமகா பேசினார்.

மேலும் படிக்க | முடிவுக்கு வந்தது நயன்தாரா- NETFLIX விவகாரம்! - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

இதனை எதிர்பார்க்காத பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயர் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் எதை எதையோ சொல்லி சமாளித்தார். பின்பு அவருடன் இருந்தவர்கள் அங்கிருந்து அவரை அழைத்து சென்றனர். ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை வெளுத்துவாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

அனைவரையும் தரக்குறைவாக பேசும் பயில்வான் ரங்கநாதனுக்கு இப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டுமென்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு ரேகா நாயருக்கும் பாராட்டும் தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | PUSHPA PART 3: ஒன்னு இல்ல, ரெண்டுள்ள மூணாவது பார்ட்டும் உண்டு: அதிரடி காட்டும் புஷ்பா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News