எனக்கு திருமணம்லாம் இல்லை; ஊடகங்களே உண்மையை சரிபாருங்கள் - நித்யா மேனன்

நித்யா மேனனுக்கு திருமணம் என்று பரவிய தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 21, 2022, 06:05 PM IST
  • தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகை நித்யா மேனன்
  • மலையாள ஹீரோவுடன் திருமணம் என தகவல் வெளியானது
  • அந்தத் தகவலை தீர்க்கமாக மறுத்துள்ளார் நித்யா மேனன்
 எனக்கு திருமணம்லாம் இல்லை; ஊடகங்களே உண்மையை சரிபாருங்கள் - நித்யா மேனன் title=

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நித்யா மேனன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை, வெப்பம், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை, மணிரத்னத்தின் ஓகே கண்மணி, ஸ்ரீப்ரியா இயக்கிய மாலினி 22 பாளையங்கோட்டை, விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24 போன்ற படங்களில் நடித்திருக்கும் நித்யா மேனனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தச் சூழலில் நித்யா மேனனுக்கும்,மலையாள திரையுலகில் கதாநாயகன் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் நித்யா மேனன் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.

மேலும் படிக்க | கழட்டிவிட்ட விஜய்! இரண்டு சூப்பர் ஸ்டார்களை இயக்கப்போகும் ஏஆர் முருகதாஸ்!

இந்நிலையில் கேரள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நித்யா மேனன், “எனக்கு திருமணம் என்று சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்தியில் முற்றிலும் உண்மை இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மையை சரிபார்க்க ஊடகங்கள் முயல வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 

மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு இப்படியொரு ரோலா? அதுவும் இதுவரை பண்ணாத கேரக்டர்!

தற்போது எனது வேலையில் மட்டுமே நான் முழு கவனத்தையும் செலுத்திவருகிறேன்” என கூறினார். இதன் மூலம் நித்யா மேனனுக்கு திருமணம் என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

தனுஷுடன் நித்யா மேனன் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதேபோல், விஜய் சேதுபதி மலையாளத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும், 19(1)(a) என்ற படத்திலும் நித்யா மேனனே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படமானது விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

மேலும் படிக்க | காதலில் விழுந்த நடிகர் சித்தார்த்... இந்த முறை யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News