சின்னத்திரையில் எண்டிரி கொடுக்கிறார் நடிகை மாளவிகா..!

Malavika in Reality Show: நடிகை மாளவிகா, சின்னத்திரைக்குள் எண்ட்ரி கொடுக்க உள்ளார். எந்த ஷாே மூலமாக தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Nov 4, 2023, 01:25 PM IST
  • 90ஸ் குழந்தைகளுக்கு பிடித்த நாயகிகளுள் ஒருவர், மாளவிகா.
  • இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்துள்ளன.
  • இவர் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
சின்னத்திரையில் எண்டிரி கொடுக்கிறார் நடிகை மாளவிகா..!  title=

தமிழ் திரையுலகில் 90’s குழந்தைகளின் கனவு கண்ணிகளுள் ஒருவராக திகழ்ந்தவர், மாளவிகா. இவர் ஒரு சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மாளவிகா:

1999ஆம் ஆண்டு வெளியான‘உன்னை தேடி’ படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. முதல் படமே அவருக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது. இந்த படத்தில் அவர், அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து அவருடனே அடுத்த படமான ‘ஆனந்த பூங்காற்றே’ எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை அடுத்து அவர் நடித்த அடுத்த மூன்று படங்களும் மெகா ஹிட் அடித்தது. 

திரையுலகில் சறுக்கல்:

மாளவிகாவிற்கு ஆரம்பம் மட்டுதாம் அமர்களமாக அமைந்ததே தவிர, அடுத்து அவர் நடித்த படங்கள் எதுவும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு, சில படங்களில் காமியோ கதாப்பாத்திரங்களில் நடித்தார். குறிப்பாக வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் வந்த இவரது கதாப்பாத்திரம் பலரை கவர்ந்தது.  “வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்..” பாட்டில் இவர் நடனமாடியிருப்பார். இதையடுத்து இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக வெளியில் பேசப்படவில்லை.  தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த இவர், தற்போது சீரியலில் நடிக்க உள்ளாராம். 

மாளவிகா 2007ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2008ஆம் ஆண்டில் ஒரு மகன் பிறந்தார். திருமணத்திற்கு பிறகு இவர் பெரிதாக சினிமாவில் ஆக்டிவாக இல்லாத காரணத்தால் வாய்ப்புகளும் மாளவிகாவிற்கு குறைந்து போனது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: காதல் ஜோடியை பிரித்த பார்வையாளர்கள்! இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்?

சின்னத்திரையில் மாளவிகா:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த பலர் மார்கெட் இழந்த பிறகு சினிமாவில் துணை கதாப்பாத்திரத்தில் நடிப்பதும், சின்னத்திரையில் நாயகியாக தோன்றுவதுமாக இருக்கின்றனர். நடிகைகள் ராதிகா, தேவையானி தொடங்கி இன்று பல நடிகைகள் சின்னத்திரையில் ஜொலிக்கின்றனர். அது மட்டுமன்றி, பல நடிகைகள் சில ரியாலிட்டி ஷோக்களுக்கு தொகுப்பாளராகவும் நடுவராகவும் வருகின்றனர். அந்த லிஸ்டில் நடிகை மாளவிகாவும் இணைய உள்ளார். 

மாளவிகா தொகுத்து வழங்க இருக்கும் நிகழ்ச்சி:

நடிகை மாளவிகா, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் “ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா..” எனும் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. பெரிய திரையில் இவரை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் சின்னத்திரையில் பார்க்கவும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | லியோ திரைப்படம்: விஜய்க்கு மகனாக நடித்க மாத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News