சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடத்துள்ள படமான ‘ரகு தாத்தா’ ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மதுரை கோர்ட் யார்ட் விடுதியில் ரகு தாத்தா படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு படத்தின் ட்ரெய்லரை சிறுமிகளுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கீர்த்தி சுரேஷ் :
“மதுரை எனக்கு ரொம்ப பிடித்த ஊர் மதுரை நான் அடிக்கடி வந்துசெல்லும் ஊர் மல்லிகை பூ மீனாட்சியம்மன் கோவில் என மதுரையில் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரகு தாத்தா படம் அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய படமாக இருக்கும், இப்படத்தில் இந்தி திணிப்பு பற்றி ஆங்காங்கே பேசப்பட்டிருக்கும்” என்று கூறினார்.
மேலும், “பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களை பற்றி நகைச்சுவையாக இந்த படத்தில் சொல்லி இருப்போம் ஜாலியாக பாப்கார்ன் சாப்பிட்டுகொண்டே பேமிலியோடு உட்கார்ந்து பார்க்கக்கூடிய படமாக இருக்கும்” என்று கூறினார்.
அரசியல் வருகை குறித்த கேள்விக்கு?
அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை நடிப்பு மட்டும் தான் என்று கூறினார். பின்னர், “வருங்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பா?” என்ற கேள்விக்கு, “ஒருவேளை அரசியலில் வந்து விட்டால் அன்று நான் கூறியதை சொல்லிக் காட்டக்கூடாது என்பதற்காக நான் இல்லை என்றும் மறுத்து வருகிறேன்” என்று கூறியிருக்கிறார். அரசியல் ஆசை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என மழுப்பலாக பதிலளித்தார்.
ஆகஸ்ட் 15 பல்வேறு படங்கள் வெளியாவது குறித்த கேள்விக்கு :
“ஆகஸ்ட் 15 அன்று நிறைய படங்கள் வருகிறது அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என ஆசை. விக்ரம் சார் நடித்துள்ள படம் வெளிவருகிறது இரண்டு மூணு படங்கள் வருகிறது எல்லா படமும் நல்லா இருக்க வேண்டும் இதில் வேறு வித காமெடி படமாக ரகு தாத்தா இருக்கும் மற்ற படங்களை விட இந்த படம் வித்தியாசமாக இருக்கும் இது வேற ஒரு பாதையில் இருக்கும்.
மேலும் படிக்க | மலை போல் குவியும் பணம்.. 2024ல் எகிறும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு
இயக்குனர் சுமன் பல்வேறு பெரிய திரைப்படங்களுக்கு எழுதி இருக்கிறார் அவர் முதன் முதலாக தமிழில் இந்த படத்தை எழுதி இயக்கி எடுத்திருக்கிறார் வேறொரு மாதிரியான காமெடி படத்தை எடுத்திருக்கிறார். ஜானுடைய மியூசிக் முதல் முறை என்னுடைய ஃபேவரிட் ஆல்பம் இது இதில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் போராட்டம் தொடர்பான பாடல்களும் இருக்கும் கானா பாடல் இருக்கிறது.
எனக்கு தியேட்டரில் சோலோவாக வெளியாக கூடிய முதல் படம் எனக்கு ஸ்பெஷலான படமாக இருக்கும். கேமராமேனாக யாமினி முதல்முறையாக ஒரு பெண் கேமரா மேனாக எடுத்த படம். ஹீரோவோவுடனான கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகி இருக்கிறது சில விஷயங்களை முழு விவரமாக சொல்ல முடியாது வித்தியாசமான கெமிஸ்ட்ரி இருக்கும் படத்தில் தெரியும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “மொழியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரி ஒரு படத்தை பற்றி பேச முடியும் நம் மக்கள் தான் இதை புரிந்து கொள்வார்கள் அதனால் தான் ரகு தாத்தா என பெயரை குறிப்பிட்டு குறிப்பிட்டுள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க கீர்த்தி சுரேஷ் தினமும் செய்த விஷயம்..எளிமையா இருக்கே..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ