ரன்வீர் சிங்கிற்கு ஆலியா பட் கொடுத்த ஆதரவு

ஆடையின்றி போஸ் கொடுத்த ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக நடிகை ஆலியா பட் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 26, 2022, 09:20 PM IST
  • ரன்வீர் சிங்கின் போஸ் சமூக வலைதளங்களில் வைரலானது
  • அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியது
  • அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரன்வீர் சிங்கிற்கு ஆலியா பட் கொடுத்த ஆதரவு title=

பாலிவுட்டின் பிரபல ஹீரோக்களில் ஒருவரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரது ஆடை குறித்த பேச்சு எப்போதும் எழும். வித்தியாசமாக, விதவிதமான நிறங்களில் அவர் அணிந்துவரும் உடைகளுக்கென்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அதேசமயம் அவர் அணியும் ஆடைகள் சமயத்தில் கிண்டல்களையும் சந்திப்பதுண்டு. ஆனால் ரன்வீர் தனக்கு தோன்றியபடி உடைகள் உடுத்துவதை நிறுத்தவில்லை.

சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஒரு அட்டைப்பட போஸ் கொடுத்தார் ரன்வீர் சிங். இதுவரை உடைகளால் கிண்டல் செய்யப்பட்ட ரன்வீர் தற்போது உடை இல்லாமல் இருந்ததால் அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இருப்பினும் அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதனை கொண்டாடி ரன்வீருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

அவரைப் போலவே விஷ்ணு விஷாலும் போஸ் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது. சுழல் இப்படி இருக்க ரன்வீர் சிங் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக நடிகை ஆலியா பட் கருத்து தெரிவித்துள்ளார். திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிரான எதையும் நான் கேட்க விரும்பவில்லை. என்னுடைய சக நடிகர் ரன்வீர் மீது வைக்கப்படும் புகார்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதளவில் அனைவராலும் விரும்பப்படுபவர். அவர் திரைப்படங்களின் மூலம் நமக்காக நிறைய செய்துள்ளார். நாம் அவருக்கு அன்பை மட்டுமே திருப்பி கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | திருமணமா அய்யயோ... பதறும் ஸ்ருதி ஹாசனின் காதலர்

மேலும் படிக்க | பா. ரஞ்சித்துடன் சம்பவம் செய்யப்போகும் நட்டி, ஸ்ரீகாந்த்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News