அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் என்று நடிகர் விஷால் பேட்டி அளித்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டோன் பீச் பிலிம்ஸ் வழங்கும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரத்னம் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டவை. இந்த படத்திற்க்கு இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். எட்டு சண்டை காட்சிகள் 5 நிமிடத்திற்கு சிங்கிள் ஷாட் போன்ற காட்சிகளை இயக்குனர் ஹரி காட்சிபடுத்தியுள்ளார். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா மதுரை, சேலம் உள்ளிட்ட ஊர்களில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா திருச்சி சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மேலும் படிக்க | 3 மணி நேரத்திற்குள் நல்ல தமிழ் படம் பார்க்க வேண்டுமா? ‘இதை’ பாருங்க..
இந்த விழாவில் நடிகர் விஷால் திரைப்பட இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரை ஆற்றினர். அப்போது பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஷால் கூறியதாவது, படத்தின் ப்ரோமோஷன்க்காக ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல உள்ளேன். ஒரு ஸ்டூடியோ அறையில் அமர்ந்து படத்தை ப்ரோமோஷன் எனக்கு விருப்பம் இல்லை. சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் அரசியல் வருவது பற்றி செய்தியாளர் கேள்விக்கு, விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல.
நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் என பேசினார். வாக்குக்கு பணம் பட்டுவாடா குறித்த கேள்விக்கு, வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு எவ்வளவு என பணம் கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது என நடிகர் விஷால் பேட்டி அளித்தார். தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார் விஷால்.
முன்னதாக தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசி இருந்த இயக்குனர் ஹரி, நடிகர் விஜய் மற்றும் விஷால் என அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மக்களுக்கு நல்லது செய்தால் சந்தோசம் தானே என்றார். மேலும் தனது படங்களின் இரண்டாவது பாகம் தற்போது எடுக்கும் எண்ணமில்லை என்று கூறிய அவர் விரைவில் போலீஸ் கதை அம்சத்துடன் கூடிய ஒரு திரைப்படம் எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஓடிடி இணையதளங்களில் படங்கள் வெளியாவதால் சினிமாவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது. திரையரங்குகள் தற்போது நல்ல நிலையில் உள்ளதால் பொதுமக்கள் திரையரங்கிற்கு வந்து பார்ப்பது எண்ணிக்கை கூடியுள்ளது. ஓடிடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் சினிமாவிற்கு கூடுதல் பலம் என்றார். மேலும் தற்போது வெளியாகியுள்ள நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படத்திற்கு 20 ஆண்டுகளுக்கு பின்பு திரையரங்கிற்கு வந்து ரசிகர்கள் வந்து உற்சாகமாக பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
மேலும் படிக்க | விவாகரத்தில் முடிந்த திருமணம்..தாங்க முடியாத சாேகம்! மனம் திறந்த டிடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ