GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! என்ன தெரியுமா?

Actor Vijay One Word Review About GOAT Movie : நடிகர் விஜய், தற்போது GOAT படத்தில் பிசியாக நடித்து வருவதை தொடர்ந்து, அப்படத்தை பார்த்து விட்டு ஒரு வரியில் விமர்சனம் கொடுத்திருக்கிறாராம்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 25, 2024, 01:27 PM IST
  • கோட் படத்தின் பாதியை பார்த்த விஜய்
  • ஒரே வார்த்தையில் விமர்சனம்!
  • என்ன சொன்னார் தெரியுமா?
GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! என்ன தெரியுமா?  title=

Actor Vijay One Word Review About GOAT Movie : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராகவும், முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய். இவரும் இயக்குநர் வெங்கட் பிரபுவும் முதன் முறையாக கைக்காேர்த்திருக்கும் படம் GOAT (The Greatest Of All Time). இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன.

GOAT திரைப்படம்:

கோலிவுட் திரையுலகின் ஜாலி இயக்குநர் என்று பெயர் பெற்றவர் வெங்கட் பிரபு. இவர், விஜய்யை வைத்து முதன்முறையாக கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கான லுக் டெஸ்ட், கிராஃபிக்ஸ் பணிகளுக்கான முன்னோட்டம் என அனைத்தும் நடைப்பெற்று வந்ததை தொடர்ந்து, இன்னும் சில நாட்களில் படத்தின் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைய இருக்கின்றன.

கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், ஜெயராம், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் ஹீரோவாக கலக்கி வந்த மைக் மோகன் இந்த படத்தின் மூலம் கம்-பேக் கொடுக்கிறார். விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகிய இருவரும் நடிக்கின்றனர். முக்கிய கதாப்பாத்திரத்தில லைலாவும் நடிக்கிறார். இவர்களை தவிர பிரேம் ஜி, வைபவ், அரவிந்த் ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்டாேரும் நடிப்பதாக கூறப்படுகிறது. 

பாதி படத்தை பார்த்த விஜய்!

கோட் திரைப்படத்தின் பணிகள் ஒரு பக்கம் நடைபெற, படத்தின் எடிட்டிங் மற்றும் இசை சேர்ப்பு பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் கோட் படத்தில் பாதியை பார்த்தாக கூறப்படுகிறது. 

அந்த ஒரு வார்த்தை..!

வழக்கமாக, படக்குழுவினர் படத்தை ப்ரமோட் செய்வதற்காக இதுவரை நடைப்பெற்ற பட பணிகள் குறித்தும், படத்தை பார்த்துவிட்டு ஹீராே என்ன கூறினார் என்பதையும் கூறுவர். அந்த வகையில், கோட் படத்தின் முதல் பாதியை பார்த்த விஜய்யும் ஒரே வார்த்தையில் “தெறிக்கிது” என்ற விமர்சனத்தை கொடுத்திருக்கிறாராம். இந்த தகவல் வெளியானதை அடுத்து, ஏற்கனவே படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு தற்போது பன்மடங்காக உயர்ந்திருக்கிறது. 

மேலும் படிக்க | GOAT படத்தில் விஜய்க்கு டபுள் மடங்கு சம்பளம்.. அப்போ மற்ற நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கோட் படம் கடைசியா? 

விஜய், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் போது “தமிழக வெற்றிக்கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் தற்போது ஆன்லைன் செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், தான் கடைசியாக கமிட் ஆகியிருக்கும் திரைப்படத்தில் நடித்து முடடித்தவுடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, காேட் படத்தை அடுத்து அவர் “தளபதி 69” படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த படம் தற்போது டிராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

அது மட்டுமன்றி, தளபதி 69 படத்தை ஸ்கிப் செய்து விட்டு, ஒரே அடியாக தளபதி 70 படத்திற்கு தாவி விட்டதாகவும், அந்த படத்தை அட்லீ இயக்குவதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன்தான் தெரியும். கோட் திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகிறது. 

மேலும் படிக்க | GOAT படத்தில் எதிர்பாராத கேமியோ கேரக்டர்கள்! த்ரிஷா to விஜயகாந்த்..முழு லிஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News