இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தான் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில், தனது அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார் நடிகர் விஜய்.
விஜய்யின் 66ஆவது படமான இதை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கிவருகிறார். இந்நிலையில், விஜய்யின் 67ஆவது படத்தை இயக்கப்போவது யார் எனும் கேள்வி சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்துவருகிறது. இந்தப் பட்டியலில் பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டுவருகின்றன.
பலரது பெயர்கள் கூறப்பட்டாலும் விஜய்யின் 64ஆவது படமான மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜே இதை இயக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுவருகிறது. நடிகர் விஜய்யிடம் லோகேஷ் கனகராஜ் இந்த ப்ராஜெக்ட் தொடர்பாகக் கதையும் சொல்லி முடித்துள்ளாராம். விஜய்க்கும் அந்தக் கதை மிகவும் பிடித்துப்போனதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து இன்னொரு புதிய தகவல் கசிந்துள்ளது. அது என்னவென்றால், இப்படத்தின் கதை முதலில் ரஜினிக்காக எழுதப்பட்டதாம். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்க லோகேஷ் கனகராஜ் இதை இயக்குவதாக இருந்ததாம். ஆனால் சில காரணங்களால் ரஜினி இதற்கு சம்மதிக்காத நிலையில்தான் இக்கதையை அப்படியே ஓரமாக வைத்துவிட்டு கமலை வைத்து விக்ரம் படத்தை எடுக்க முன்வந்தாராம் லோகேஷ் கனகராஜ்.
மேலும் படிக்க | ‘குஷி’ மோடில் விஜய்- 66 டீம்?! - ஓ... இதுதான் காரணமா?!
தற்போது விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிந்து வருகிற ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியாகவும் உள்ளது. இதனால் விரைவிலேயே விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ளதாகக் கூறப்படும் படம் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இப்படத்தை கமல்ஹாசனே தயாரிக்கவுள்ளாரா அல்லது வேறு யாரேனும் தயாரிக்கவுள்ளார்களா எனும் விபரமும் விரைவில் தெரியவரும்.
மேலும் படிக்க| KGF-2 இனி ஹவுஸ்ஃபுல் ஆவது கஷ்டம்தானாம்- ஏன் தெரியுமா?!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR