சென்னை: பிகில் தனது கதை எனக்கூறி சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், பிகில் படத்திற்கு தடை விதிக்க முடியாது. இந்த வழக்கு சம்பந்தமாக புதிய மனுவை தாக்கல் செய்ய அம்ஜத் மீரானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று காலை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஏற்கவே பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உதவி இயக்குநர் கே.பி.செல்வாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளிலும் காட்சியிடக்கூடாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்திருந்தார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இப்படி சுமார் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள பிகில் படத்தை சுற்றி ஏராளமான பிரச்சனை இருந்து வரும் நிலையில், திட்டமிட்டப்படி நாளை அனைத்து திரையரங்குகளிலும் பிகில் படம் வெளியாகும் என்றும், அதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த படத்துடன் நாளை நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள "கைதி" படமும் திரைக்கு வருகிறது.
அட்லி- விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் இத்திரைப்படத்தில், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராப், விவேக், பரியேறும் பெருமாள் கதிர், மொட்ட ராஜேந்திரன், டேனியல் பாலாஜி, யோகிபாபு, இந்துஜா, ரெபா மோனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சுமார் 180 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்தியா மற்றும் சீனாவில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்டோபர் 25) வெளியாவாதில் எந்தவித சிக்கலும் இல்லை.