நடிகர் சித்தார்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை!

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு எதிராக ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்தார்த் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் வீடியோ கால் மூலம் ஆஜரானார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2022, 03:12 PM IST
  • சாய்னா நேவாலின் ட்வீட்டிற்கு சித்தார்த் இரட்டை அர்த்தத்தில் பதில் அளித்திருந்தார்.
  • சித்தார்த் சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரினார்.
  • சித்தார்த்தின் சர்ச்சையான ட்வீட் குறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது.
நடிகர் சித்தார்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை! title=

கடந்த மாதம் பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்து சாய்னா நேவாலின் ட்வீட்டிற்கு நடிகர் சித்தார்த் இரட்டை அர்த்தத்தில் கேலியான பதில் அளித்திருந்தார்.  இது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.  சித்தார்த் (Siddarth) இப்படி கூறியது தவறு என்று அவருக்கெதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.  இதனையடுத்து சித்தார்த் சாய்னா நேவாலிடம் நான் கூறியதை தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள், இதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று மன்னிப்பு கோரினார்.

ALSO READ | சித்தார்த்தை ஏமாற்றியது யார்; வைரலாகும் பதிவு

சித்தார்த்தின் சர்ச்சையான ட்வீட் குறித்து தேசிய மகளிர் ஆணையம் (NCW) தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.  NCE தலைவர் ரேகா ஷர்மா, சித்தார்த்தின் ட்வீட்டை காவல்துறை தலைமை இயக்குனர் சி.சைலேந்திர பாபுவுக்கு அனுப்பி வைத்தார்.  மேலும் இனி வரும் காலங்களில் நடிகர் சித்தார்த் இதுபோன்று சர்ச்சையை கிளப்பும் விதமான கருத்துக்களை பதிவிடுவதை தடுக்கும் பொருட்டு, சட்ட விதிகளின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று NCW கோரிக்கை வைத்துள்ளது. 

இதனையடுத்து சித்தார்த் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் (Central Crime Branch) வழக்கு பதிவு செய்து, சம்மன் அனுப்பினர்.  மேலும் சித்தார்த்தின் சர்ச்சைக்குரிய ட்வீட் குறித்து ஹைதராபாத் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறது.  இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்தார்த் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் வீடியோ கால் மூலம் ஆஜரானார்.  

 

அதில் தான் இந்த பிரச்சனை குறித்து சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.  இந்த விசாரணையின் போது நடிகர் சித்தார்த் அதிகாரிகளின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு தந்ததாகவும், மேலும் சில காரணங்களுக்காக இந்த விசாரணை பதிவு செய்யப்பட்டு உள்ளது, மேலும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் சித்தார்த்தை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தப்படும் என்று விசாரணையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ALSO READ | சாய்னா விவகாரம்: சித்தார்த்தை விசாரணைக்கு அழைத்த காவல்துறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News