அயலான் படத்தில் ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா? ‘இந்த’ நடிகர்தான்!

Ayalaan Alien Voice: சிவாகர்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள அயலான் படத்தில் ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்த நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Dec 13, 2023, 01:38 PM IST
  • அயலான் படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.
  • இதில் ஏலியன்தான் முக்கிய கதாப்பாத்திரம்.
  • இதற்கு வாய்ஸ் கொடுத்துள்ள நடிகர் யார் தெரியுமா?
அயலான் படத்தில் ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா? ‘இந்த’ நடிகர்தான்! title=

நடிகர் சிவகார்த்திகயேன் முதன்முதலாக நடிக்கும் சயின்ஸ்-ஃபிக்ஷன் படம், அயலான். இந்த படத்தில் ஒரு வேற்றுகிரக ஏலியனும் இவரும்தான் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர்.

அயலான் திரைப்படம்:

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ‘நேற்று இன்று நாளை’ படத்தை இயக்கி அறிமுகமானவர், ஆர்.ரவிகுமார். இதையடுத்து அவர் இயக்கும் அடுத்த அறிவியல் சார்ந்த படம், அயலான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, ரகுல் பிரீத் சிங் அவருக்கு ஜோடியாக வருகிரார். இப்படத்தின் பணிகள் 5 வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் முதல் சிவகார்த்திகேயனின் படமாகும். 

வாய்ஸ் கொடுக்கும் நடிகர்..

அயலான் படத்தில் சிவாகர்த்திகேயனுடன் படம் முழுக்க ட்ராவல் செய்யும் கேரக்டர்தான் அந்த ஏலியன். இந்த கதாப்பாத்திரத்திற்கு பிரபல நடிகர் ஒருவர் வாய்ஸ் கொடுத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, சித்தார்த்தான். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சித்தா’ பட ஹீரோவான சித்தார்த், நடிப்பை தவிர சினிமா துறையில் பல அவதாரங்களை எடுத்துள்ளார். சிறுவதிலேயே ஒரு பிரபல் விளம்பரத்திற்கு வாய்ஸ் கொடுத்துதான் சித்தார்த் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். கொஞ்சம் திரைத்துரையில் வளர்ந்த பிறகு, சந்தோஷ் சுப்புரணியம் படத்தில் இடம் பெற்றிருந்த ‘அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்’ பாடலை பாடியுள்ளார். இது மட்டுமல்ல, இன்னும் பல பாடல்கள் இவரது வாய்ஸில் வெளிவந்துள்ளன. 2019ஆம் ஆண்டு வெளியான தி லயன் கிங் படத்தில் வளர்ந்த் சிம்பாவிற்கு வாய்ஸ் கொடுத்ததும் இவர்தான். தற்போது அயலான் படத்தில் இவர் குரல் இடம் பெற்றுள்ள விவரத்தை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே தங்களின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

அந்த பதிவில், அயலான் குழுவில் வேற்றுகிரக வாசியாக பங்கேற்றுக்கொண்டதற்கு நடிகர் சித்தார்த்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், அயலான் கதாப்பாத்திரத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் உற்சாகத்தையும் பாராட்டிய அவர்கள், கண்டிப்பாக ரசிகர்கள் படத்தை தியேட்டரில் ரசிப்பர் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? இவர்தான் அடுத்த தொகுப்பாளர்

சிவகார்த்திகேயனின் படத்திற்கு வாய்ஸ் கொடுத்த இன்னொரு நடிகர்..

கடைசியாக திரையரங்கில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் படம், மாவீரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு யாரோ ஒருவரின் குரல் கேட்பது போலவே படம் நெடுகிலும் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த வாய்ஸை கொடுத்தவர், நடிகர் விஜய் சேதுபதி. இவர், இப்படத்திற்கு வாய்ஸ் கொடுத்ததற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இந்த இரண்டு படங்களிலும் வெவ்வேறு ஹீரோக்கள் பெரும் பங்காற்றியிருப்பது, ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. 

அயலான் ரிலீஸ் எப்போது? 

அயலான் திரைப்படத்தின் பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் மொத்தம் 4,500 வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுளதாம். இதுவரை வெளிவந்துள்ள இந்திய சினிமாக்களிலேயே அதிக வி.எஃப்.எக்ச் காட்சிகள் கொண்ட படம், இதுதான். இப்படம், இந்த வருட தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட வேலைகள் இன்னும் முடியாததால் இதனை அடுத்த வருட பொங்கல் ரிலீஸிற்கு தள்ளிப்போட்டுள்ளனர். 

சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள்..

அயலான் பட வேலைகள் கிட்டதட்ட முடிந்து விட்ட நிலையில், சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இதையடுத்து, இயக்குநர் முரகதாஸ் இயக்கும் ஒரு படத்திலும் சிவா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 73 வயது... உலகத்திற்கே சூப்பர்ஸ்டார்.. ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News