நடிகர் பார்த்திபன் வீட்டில் தங்கக்கட்டி காணவில்லை என புகார்!

திருவான்மியூரில் நடிகர் பார்த்திபன் வீட்டில் இருந்த தங்கக் கட்டியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார். 

Last Updated : Apr 16, 2018, 12:49 PM IST
நடிகர் பார்த்திபன் வீட்டில் தங்கக்கட்டி காணவில்லை என புகார்!  title=

பிரபல இயக்குனர், நடிகர், எழுத்தாளர், பேச்சாளர் என பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கி வெற்றிகண்டவர் நடிகர் பார்த்திபன். 'புதியபாதை' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பார்த்திபன் தற்போது பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டும், 'உள்ளே வெளியே' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியும் வருகிறார்.

இந்நிலையில், சென்னை திருவான்மியூர் காமராஜ் நகரில் இயங்கி வரும் நடிகர் பார்த்திபனின் அலுவலகத்தில், கொள்ளையர்கள் சிலர் புகுந்து அங்கிருந்த சிறிய தங்க கட்டிகளையும், திரை துறைக்காக பார்த்திபணுக்கு வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பதக்கங்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் காணாமல் போனதை அறிந்த பார்த்திபனின் மேலாளர் அளித்த தகவலை தொடர்ந்து, நடிகர் பார்த்திபன் சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் பார்த்திபன் தரப்பில் சுமார் 40000 ரூபாய் மதிப்புள்ள பதக்கங்கள் கொள்ளை போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

காமராஜ் நகரில் உள்ள நடிகர் பார்த்திபன் வீட்டில் இருந்த சுமார் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தங்கக் கட்டியை காணவில்லை என போலீஸிடம் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News