மாதவன் கரம்பிடிக்க நினைத்த ‘அந்த’ நடிகை..யார் தெரியுமா?

Madhavan: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த மாதவன், ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள நினைத்தாராம். அவர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Feb 29, 2024, 08:42 PM IST
  • மாதவன் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகராக இருந்தார்.
  • இவர் ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்ள நினைத்தாராம்
  • அந்த நடிகை யார் தெரியுமா?
மாதவன் கரம்பிடிக்க நினைத்த ‘அந்த’ நடிகை..யார் தெரியுமா?  title=

Madhavan Latest News: தமிழ் இளசுகளின் மத்தியில் பல நாட்களாக ‘சார்மிங் ஹீரோவாக’ இருந்தவர், நடிகர் மாதவன். இவரை பலர், Maddy என செல்லமாக அழைப்பதுண்டு. மாதவனின் பழைய வீடியோக்களும், இப்போது வரை அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் மாதவன், திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தபோது ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள நினைத்தாராம். அந்த நடிகை யார் தெரியுமா? 

மாதவன் திருமணம் செய்து கொள்ள நினைத்த நடிகை..

பாலிவுட்டில், பிரபல நடிகையாக வலம் வருபவர், ஜூஹி சாவ்லா. இவரைத்தான் மாதவன் தான் இளம் வயதில் இருந்த போது திருமணம் செய்து கொள்ள நினைத்தாராம். ஜூஹி சாவ்லாவிற்கு தற்போது 56 வயதாகிறது. இவர், இளம் நடிகையாக இருந்த போது இந்திய இளைஞர்களின் மனங்களை கொய்தவர். பலரது க்ரஷ் லிஸ்டில் பல நாட்களாக இருந்தார். தற்போதும் படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இவரை மாதவன் திருமணம் செய்து கொள்ள நினைத்ததாகவும், இது குறித்து தனது தாயிடமும் பேசியதாகவும் மாதவன் கூறியிருக்கிறார். 

மாதவன் திருமணம் செய்து கொண்ட பெண்..

பல க்ரஷ் காதல் கதைகள் கை சேராமல் போயுள்ளன. அதே போலத்தான், மாதவனின் கதையும் ஆகியுள்ளது. இவர் ஜூஹி சாவ்லா மீது க்ரஷ் வைத்திருந்ததது, க்ரஷ் ஆக மட்டுமே இருந்துள்ளது. கடைசியில் மாதவன் சரிதா பிர்ஜி என்பவரை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் சரிதா விமான பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார், மாதவனும் பெரிய ஹீரோவாக மாறிவிட்டார். இவர்களுக்கு வேதாந்த் மாதவன் என்ற மகன் உள்ளார். இவர், 2005ஆம் ஆண்டு பிறந்தார். 

மேலும் படிக்க | சத்தமின்றி முத்தம் தா: கதை இதுதான்.. பத்திரிகையாளர் சந்திப்பில் ஓபனாக பேசிய இயக்குநர்

Juhi Chawla

டெலிவிஷன் நடிகர் டூ பெரிய நடிகர்..

நடிகர் மாதவன், 90களில் இந்தி டிவி சேனல்களில் ஒளிபரப்பான தொடர்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அப்படியே அவருக்கு 2000ஆம் ஆண்டில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பின்னர் நடந்தது என்ன என்பது ரசிகர்களுக்கே தெரியும். முதல் படத்திலேயே, “யார் இந்த அழகன்?” என பலரை திரும்பி பார்க்க வைத்துவிட்டார், மாதவன். பின்னர், கோலிவுட் உலகில் அசுர வளர்ச்சி காட்டினார். தொடர்ந்து, தமிழ் படங்கள் இந்தியில் ரீ-மேக் ஆன படங்களிலும் ஹீரோவாக நடித்தார். பாலிவுட்டும் அவரை இன்முகத்துடன் வரவேற்க, அங்கும் இவருக்கு கெரியர் செட் ஆகி ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி கொடுத்தது. 

அதனாலேயே, 2022ஆம் ஆண்டு ‘ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தில் நம்பி நாராயணன் ஆக நடித்தார். இதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இத்தனை வருடங்கள் கழித்தும், மாதவன் ரசிகர்களின் மனதில் பிடித்திருந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. 

மேலும் படிக்க | Deepika Padukone: கர்ப்பத்தை அறிவித்த தீபிகா -ரன்வீர்.. குஷியில் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News