சென்னை: என் தேசம் என் உரிமை என்ற பெயரில் புதிய கட்சி துவங்கியுள்ள இளைஞர்களுக்கு நடிகர் விவேக் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி அமைதியான வழியில் போராடிய இளைஞர்கள் சேர்ந்து என் தேசம் என் உரிமை என்ற பெயரில் புதிய கட்சி துவங்கியுள்ளனர்.
ஆன்லைன் மூலம் அந்த கட்சியில் 6 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்துவதை எதிர்த்து போராட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த கட்சியினருக்கு விவேக் டிவிட்டர் மூலம் அறிவுரை வழங்கியுள்ளார். அதில்:-
A party by youth!!- my advice! pic.twitter.com/SK4zJjFonc
— Vivekh actor (@Actor_Vivek) February 26, 2017