Bigg Boss தமிழ் சீசன் 4 இல் அந்த பிரபலம் பங்கேற்கவில்லை...வெளியான தகவல்...

பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் தினம் தோறும் வெளியாகி வருகிறது.

Last Updated : Sep 16, 2020, 06:28 PM IST
    1. பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் தினம் தோறும் வெளியாகி வருகிறது.
    2. பிரபல நடிகைகளான நயன்தாரா, திரிஷா, ரைசா வில்சன், நமீதா என ஏகப்பட்ட பிரபலங்களுக்கு செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் ஆக பணியாற்றி கருண் ராமன், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாயின.
    3. பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் கலந்துகொள்ளும் 11 போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Bigg Boss தமிழ் சீசன் 4  இல் அந்த பிரபலம் பங்கேற்கவில்லை...வெளியான தகவல்... title=

தனியார் தொலைகாட்சியில் “உங்கல் நான்” உலக நாயகன் கமல்ஹாசன் (Kamal Hassan) தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் (Bigg Boss). முதல் 3 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நான்காவது சீசன் கோவிட் தொற்றுநோய் காரணமாக ஜூலை நடுப்பகுதியில் திரையிடப்பட வேண்டிய நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே போல, பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் தினம் தோறும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என வைரலாக எதிர்பார்க்கப்பட்ட கருண் ராமன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 

ALSO READ | Bigg Boss தமிழ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு!!

பிரபல நடிகைகளான நயன்தாரா, திரிஷா, ரைசா வில்சன், நமீதா என ஏகப்பட்ட பிரபலங்களுக்கு செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் ஆக பணியாற்றி கருண் ராமன், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாயின. ஆனால் தற்போது இது தொடர்பாக கருண் ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதை விட சூப்பரான ஒரு வேலை எனக்கு இப்போ இருக்கு. வீண் வதந்திகளை நம்பி யாரும் ஏமாந்து போக வேண்டாம் என தெரிவித்தார். 

 

இதற்கிடையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் கலந்துகொள்ளும் 11 உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் பதினான்கு பிரபலங்கள் இதுவரை 11 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் தமிழ் 11 உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியல்:

  1. சனம் ஷெட்டி
  2. கிரன் ரதொட்
  3. கருண் ராமன் 
  4. ஷாலு ஷம்மு
  5. ரியோ ராஜ்
  6. அமுதவாணன்
  7. அமிர்தா ஐயர்
  8. சிவானி நாராயணன்
  9. புகழ்
  10. ஆர் ஜே வினோத்
  11. பாலாஜி முருகதாஸ் 

எனவே நிகழ்ச்சியை மிகவும் பிரபலமாகக் கொண்ட நாடகம், நட்பு, காதல் மற்றும் சண்டைகளுக்கு சாட்சியாக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

ALSO READ | லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் இணையும் புது படம்....டைட்டில் இதுவா?

Trending News