ஆங்கிலோ இந்தியன் நியமன எம்.எல்.ஏக்களை ஆளுநர் நியமிக்க கூடாது: உச்சநீதிமன்றம்!

நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும்வரை ஆங்கிலோ இந்தியன் நியமன எம்.எல்.ஏக்களை ஆளுநர் நியமிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது!  

Last Updated : May 18, 2018, 01:57 PM IST
ஆங்கிலோ இந்தியன் நியமன எம்.எல்.ஏக்களை ஆளுநர் நியமிக்க கூடாது: உச்சநீதிமன்றம்! title=

12:01 18-05-2018

நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும்வரை ஆங்கிலோ இந்தியன் நியமன எம்.எல்.ஏக்களை ஆளுநர் நியமிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது!


12:01 18-05-2018
பெரும்பான்மையை நிரூபிக்க திங்கள் வரை அவகாசம் கேட்ட எடியூரப்பா தரப்பு கோரிக்கை  உச்சநீதிமன்றம் நிராகரிப்பு! 


11:36 18-05-2018
கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!

 


11:33 18-05-2018

அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வந்து வாக்களிக்க பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யலாமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுபியுள்ளது!

 


11:31 18-05-2018
யாரை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முடிவு செய்யும் சுதந்திரம் ஆளுநருக்கு இல்லை ஆட்சியமைக்க அழைக்கும் விவகாரத்தில் மரபுகள், நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்!
 
எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தன்னிச்சையான முடிவு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கபில்சிபில்! 

11:26 18-05-2018
நாளை பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள தயார் என்று உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மஜத வழக்கறிஞர் பதில் தெரிவித்துள்ளனர்!


11:23 18-05-2018

நம்பிக்கை வாக்கெடுப்பே சிறந்த முடிவாகும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி தெரிவித்துள்ளார்!


11:19 18-05-2018
கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநரின் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு என 2 வழிகள் தான் உள்ளன என்று  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்!
 


11:12 18-05-2018
எடியூரப்பாவுக்கு போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. சட்டப்பேரவையில் தேவைப்படும் போது பெரும்பான்மையை நிரூபிப்போம் - எடியூரப்பா தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி பதில்!

கர்நாடக பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடலாமா?; பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா? என்று உச்சநீதிமன்ற நீதிபதி  கேள்வி எழுபியுள்ளார்!


11:05 18-05-2018

ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரிடம் எடியூரப்பா அளித்த கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் முகுல் ரோகித்கி!
 

10:56 18-05-2018

எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெர்வித்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது!


நடந்து முடிந்த கர்நாட்டக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக தனி கட்சி பெருன்பான்மை என்னும் பெயரில் கர்டாட்டகவில் ஆட்சி அமைத்தது. இதன் அடையாளமாக கர்நாட்டக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார், மேலும் 15 நாள் அவகாசத்தில் பெருன்பான்மையை நிரூபிக்க காத்துள்ளார். 

கர்நாட்டகாவில் 104 இடங்களில் வெற்றிப்பெற்ற பாஜக ஆட்சி அமைக்க கூடாது என்பதற்காக 78 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸும், 38 இடங்களை பெற்றுள்ள JDS-ம் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கு உரிமை கோரின. எனினும் கர்நாட்டக ஆளுநர் பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். 

இதனை எதிர்த்து நேற்று முன் தினம் இரவு காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூ‌ஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்தார். இந்த அமர்வு நள்ளிரவு கடந்து 2.11 மணிக்கு தன் விசாரணையை தொடங்கியது. நேற்று அதிகாலை 5.28 மணிக்கு விசாரணை முடிந்தது. இதையடுத்து, எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இதனால், கர்நாடக அரசியல் களத்தில் அனல் பறந்து வருகிறது. எடியூரப்பாவின் பதவி தப்புமா? அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படுமா என்பது குறித்து இன்றைய விசாரணையில் முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending News