நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல் ஒன்று உள்ளது. ஏப்ரல் 1 முதல் சில மாற்றங்கள் ஏற்படப்போகின்றன...!
இதன் காரணமாக பழைய IFSC மற்றும் MICR வேலை செய்யாது. இவற்றை மார்ச் 31 க்குள் மாற்ற வங்கி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இல்லையென்றால், வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் பயன்முறையில் இருந்து பரிவர்த்தனை செய்ய முடியாது. இந்த தகவலை வங்கி தனது ட்விட்டரில் வழங்கியுள்ளது. இது குறித்த அறிவிப்புகளை இந்தியன் ரிசர்வ் வங்கியும் (RBI) வெளியிட்டுள்ளது.
பழைய IFSC குறியீடு மற்றும் MICR குறியீட்டை மாற்றுமாறு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லையென்றால், பழைய குறியீட்டைக் கொண்ட கணக்கு வைத்திருப்பவர்கள் 31 மார்ச் 2021 முதல் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாது.
PNB-யில், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா (UBI) ஆகிய இரண்டு அரசுக்கு சொந்தமான வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. 1 ஏப்ரல் 2020 முதல் PNB-யுடன் இந்த வங்கிகள் இணைந்துவிட்டன. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இப்போது PNB-யுடன் இணைந்துவிட்டன. இந்த இணைப்பிற்குப் பிறகு, PNB, இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக மாறியுள்ளது. இதன் பின்னர், இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இப்போது புதிய காசோலை புத்தகம் மற்றும் IFSC மற்றும் MICR குறியீட்டைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ALSO READ | 800 ரூபாய் LPG சிலிண்டரை வெறும் 94 ரூபாய்க்கு முன்பதிவு செய்யுங்கள்.!
வங்கி தனது ட்வீட்டில் இதற்கான கட்டணமில்லா எண்ணையும் பகிர்ந்துள்ளது. இந்த எண்ணில் அழைத்து இந்த விவரங்கள் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெறலாம். இணைப்புக்குப் பிறகு PNB –யில் இணைந்த இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இப்போது புதிய காசோலை மற்றும் புதிய IFSC குறியீட்டைப் பெற வேண்டும் என்று வங்கி கூறியுள்ளது.
இது தொடர்பான எந்தவொரு தகவலுக்கும், வங்கியின் கட்டணமில்லா எண்களான 18001802222/18001032222 என்ற எண்களில் அழைக்கலாம். பழைய காசோலை புத்தகங்கள் மற்றும் பழைய IFSC குறியீடுகள் ஏப்ரல் 1 முதல் இயங்காது என்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல், சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியுடன் அரசு இணைத்துள்ளது. அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைந்துள்ளது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR