ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் துவங்கியவுடன், இந்த ஆண்டின் கோடை வெப்பம் நம்மையெல்லாம் எப்படி வாட்டி எடுக்கப் போகிறதோ என்ற எண்ணமே பெரும்பாலானோரின் மனதில் தோன்ற ஆரம்பித்து விடும். வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகும் இந்த காலகட்டத்தில், சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏசி வாங்குவோரின் எண்ணிக்கையும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
ஏசி அதிகம் பயன்படுத்தும் அதே வேளையில், கரெண்ட் பில் அச்சமும் கூடவே நம்மை தாக்கும். குறிப்பாக ஏசியை அதிகமாகப் பயன்படுத்துகிறீர் என்றால், கரண்ட் பில் உங்கள் பாக்கெட் பணத்தைச் சூறையாடிவிடும். இந்நிலையில், புதிய AC வாங்கும் முன்பு சில முக்கிய விஷயங்களைக் கவனித்து ஏசி வாங்கினால், உங்களின் கரண்ட் பில் குறைய அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், சில டிப்ஸை கடைபிடித்து ஏசியை பயன்படுத்தினால் உங்கள் மின்சார கட்டணம் மிக கணிசமாக குறையும்.
ஏசி வாங்கிய பின்னர் நீங்கள் மின்சாரத்தைத் திறமையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த விரும்பினால், முதலில் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சரியான ஏர் கண்டிஷனரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதை நீங்கள் சரியாகச் செய்தாலே, உங்களுடைய மாதாந்திர மின்சார கட்டணத்திலிருந்து ஒரு கணிசமான தொகையை மிச்சம் பிடிக்கலாம்.
மேலும் படிக்க | DigiLocker: PAN கார்டு முதல் DL வரை ... வாட்ஸ்அப்பில் பதிவிறக்கம் செய்ய எளிய வழி!
அதிக நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஏசி
வீட்டுக்கு புதிதாக ஏசி வாங்கும்போது அவற்றின் ரேட்டிங் என்ன என்று பார்த்து வாங்க வேண்டும். 5 ஸ்டார் ரேட்டிங் இருந்தால் அந்த சாதனம் மின்சாரத்தை அதிக அளவில் மிச்சப்படுத்தும். இந்தியாவில் ஏறக்குறைய ஒவ்வொரு பிராண்டட் ஏ.சி-களும் 1-5 முதல் நட்சத்திர மதிப்பீட்டில் வருகின்றன. அதிலும் ஏ.சி.க்களுக்கான இன்வெர்ட்டர் எனப்படும் தொழில்நுட்பம் கொண்ட ஏர் கண்டிஷனர் 30-35 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏ.சியை 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் செட் செய்யுங்கள்
வீட்டுக்குள் வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில், பொதுவாக ஏசியை 18, 19 டிகிரியில் வைக்கும் பழக்கம் உள்ளது. இதனால குளிர் அதிகமாகி அதன் பின் கனமான போர்வையையும் போர்த்திக் கொள்வார்கள். இதனால் அதிக மின்சாரம் செலவாகும். எனவே நீங்கள் வெப்பநிலையை 24 டிகிரியில் வைத்தால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். இதனால் அரையில் மிதமான குளிர் நிலவுவதோடு மின்சாரமும் மிச்சமாகும். வெப்பநிலை பராமரிப்பு மற்றும் மின் நுகர்வு ஆகியவற்றைக் குறைப்பதற்கு ஏசி வெப்பநிலை 24 டிகிரி ஆக இருக்க வேண்டும்.
தேவைக்கு ஏற்ற ஏசி
ஏ.சி.யை வாங்குவதற்கு முன், உங்கள் இருப்பிடத்திற்கு பொருந்தும் வகையிலான ஏசியை வாங்க தீர்மானிக்க வேண்டியது அவசியம். அறை அளவு, நீங்கள் இருக்கும் தளம், சூரிய ஒளி கிடைக்கும் அளவு ஆகியவற்றிற்கு ஏற்பவும், இருப்பிடத்திற்கு ஏற்பவும் சரியான ஏ.சி.யை வாங்குவது செயல்திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு சூரியன் வெளிச்சம் அதிகம் வராத 150 சதுர அடி அறைக்கு 1.50 திறன் கொண்ட ஏர் கண்டிஷனர் தேவை என்கின்றனர் நிபுணர்கள்.
வழக்கமான சர்வீஸிங் அவசியம்
ஒரு ஏர் கண்டிஷனரில் 3000 க்கும் மேற்பட்ட பாகங்கள் உள்ளன, எனவே, சரியான நேரத்தில் சர்வீஸிங் செய்து பராமரிப்பது மிக முக்கியமானது. நுகர்வோர் விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்கும் பிராண்டுகளை வாங்க வேண்டும் . அதோடு, இயந்திரத்தின் தடையற்ற செயல்பாட்டிற்கான வழக்கமான சோதனை மேற்கொள்ள வேண்டும். ஏ.சி.யின் நீண்ட ஆயுளை அதிகரிக்க 7-15 நாட்கள் இடைவெளியில் அதன் பில்டர்களை சுத்தம் செய்து வெளிப்புறத்தில் உள்ள பாகங்களை கழுவ வேண்டும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட், இலவச ரேஷனுடன் 1000 ரூபாய் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ