ஆதார் அட்டை குறித்து அவ்வப்போது பல புதுப்பிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போது நீங்கள் ஃபேஸ் கேம் மூலம் ஆதார் அட்டையை (Aadhaar Card) பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது இன்னும் பலருக்கு தெரியவில்லை. ஆதார் அட்டையைப் பதிவிறக்குவதற்கான வழி என்ன என்பதை இப்போது பார்க்கலாம்:
1-முதலில் Google-ல் UIDAI ஐத் சர்ச் செய்ய வேண்டும். முதல் ஆப்ஷனில் நீங்கள் uidai.gov.in என்ற வலைத்தளத்தைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்யவும்.
2- இதற்குப் பிறகு, ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கும். அதில் நீங்கள் பல வித ஆப்ஷன்களைக் காணலாம். கீழே ‘Get Aadhaar Card’ மற்றும் ‘Update Aadhaar Card’ ஆகிய ஆப்ஷன்கள் இருக்கும்.
3- ‘Get Aadhaar Card’ ஆப்ஷனில் ‘Download Aadhaar Card’ என்ற மற்றொரு ஆப்ஷனும் கிடைக்கும். அதில் கிளிக் செய்யவும். அதன் பிறகு நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்குச் செல்வீர்கள். இந்த பக்கத்தில் Aadhaar Card ஆப்ஷனுக்கு கீழே ‘Face Authentication’ ஆப்ஷன் இருக்கும்.
ALSO READ: உங்க PAN card original-லா fake-கா? எதுக்கும் இப்படி ஒரு முறை check செஞ்சிடுங்க…
4- Face Authentication-ல் கிளிக் செய்வதற்கு முன், உங்கள் மொபைல் எண்ணையும், கேப்ட்சாவையும் உள்ளிடவும். அவற்றை உள்ளிட்ட பிறகு, நீங்கள் முக அங்கீகாரத்தைக் கிளிக் செய்யலாம். நீங்கள் கிளிக் செய்தவுடன், ஒரு அறிவுறுத்தல் பக்கம் தோன்றும், அதில் முக அங்கீகாரத்தின் முன் உங்கள் புகைப்படத்தை எவ்வாறு கிளிக் செய்ய வேண்டும் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதன் பிறகு நீங்கள் OK பொத்தானை அழுத்த வேண்டும்.
5- அதன் பிறகு உங்கள் கேமரா ஓப்பன் ஆகும். சரியான வெளிச்சம் இருக்கும்படி, உங்கள் முகத்தை கேமராவின் முன் கொண்டு வர வேண்டும். வலைத்தளம் தானாகவே புகைப்படத்தைக் கிளிக் செய்யும். உங்கள் புகைப்படம் கிளிக் செய்யப்பட்டவுடன் உங்கள் ஆதார் பதிவிறக்கம் செய்யப்படும்.
ஆதார் அட்டை பெறும் செயல்முறையை UIDAI தொடர்ந்து எளிதாக்கி வருகிறது. இது குறித்த தகவல்களையும் பல்வேறு வழிகளில் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றது.
ALSO READ: இளைஞர்களுக்காக 'Mine' சலுகையை அறிமுகப்படுத்திய ICICI வங்கி..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR