கரப்பான் பூச்சிகள் வீட்டில் அதிகம் இருப்பது யாருக்கு தான் பிடிக்கும். அவற்றை பார்த்தால், பயப்படுபவர்களும் உண்டு. அதனைக் கண்டு அஞ்சுபவர்களும் உண்டு. மேலும் அவை ஆபத்தான பாக்டீரியாக்களைக் பரப்பும், உங்கள் உணவையும் மாசுபடுத்தும். கரப்பான் பூச்சி பிரச்சனையை கெமிக்கல் ஏதும் இல்லாமல், எளிய வகையில் தீர்க்கலாம்.
கரப்பான் பூச்சிகளுக்கு கதகதப்பான, ஈரப்பதமான இடங்களை மிகவும் பிடிக்கும். அதனால்தான் நீங்கள் அவற்றை பெரும்பாலும் சமையலறையில் காணலாம்,. அதற்கு தேவையான உணவும் இங்கே கிடைத்து விடுகிறது. இருப்பினும் அலமாரியில் மற்றும் தண்ணீர் வடிகால்கள் போன்ற பிற இடங்களிலும் அதிகம் பார்க்கலாம். கரப்பான் பூச்சிகள் ஈ.கோலி (E.coli ) பாக்டீரியாவை பரப்பி வயிற்று பிரச்சனை மற்றும் வயிற்று போக்கை ஏற்படுத்தும். எனவே அதனை உடனே அகற்றுவது நல்லது. அதற்கு கீழே கொடுக்கப்பட்டவைகளை பின்பற்றினால் போதும்.
உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்: நீங்கள் கரப்பான் பூச்சியிலிருந்து விடுபட விரும்பினால் சுத்தமான வீட்டை வைத்திருப்பது முக்கியம். ஏனெறால், கரப்பான் பூச்சிக்கு அசுத்தம் மிகவும் பிடித்தமான விஷயம். அதனால், குப்பைகளை சேர்க்காமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
பே இலைகளை பயன்படுத்தலாம்: மசாலா பொருளான பே இலைகளின் வாசனையை கரப்பான் பூச்சிகள் வெறுக்கின்றன. சில பே இலைகளை பொடி செய்து, பின்னர் அவற்றை கரப்பான் பூச்சிகள் அதிகம் இருக்கும் இடங்களில் தூவவும். இதன் வாசனையை பொறுக்க முடியாமல் கரப்பான் பூச்சிகள் ஓடி விடும்.
ALSO READ | Jio, Airtel, BSNL மற்றும் Vi வழங்கும் சிறந்த மாதாந்திர ரீசார்ஜ் பளான்கள்
அம்மோனியா கொண்டு சுத்தம் செய்யுங்கள்: இந்த வாசனை பலருக்கு அவ்வளவாக பிடிக்காது. ஒருவேளை, இது உங்களுக்கு பிடிக்காது என்றால், மேலே கூறியவற்றை பின்பற்றலாம். வாசனை பரவாயில்லை என நினைப்பவர்கள் இதனை இதனை முயற்சிக்கலாம். அம்மோனியாவை உபயோகப்படுத்தி சுத்தம் செய்தால் பலன் இருக்கும். இரண்டு கப் அம்மோனியாவை ஒரு வாளி தண்ணீரில் கலந்து சுத்தம் செய்யும் ஒரு சல்யூஷனாக பயன்படுத்துங்கள். இந்த வாசனை கரப்பான் பூச்சிக்கு பிடிக்காத வாசனை என்பதால், கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.
டேப்களை ஒட்டி பொறிகளை உருவாக்குங்கள்: இது மிகவும் எளிமையானது, ஆனால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றாக ஒட்டும் நல்ல தரமான பேப் ஒன்றை வாங்கவும். வீட்டைச் சுற்றி அதனை ஒட்டவும். அதன் பிசுபிசுப்பான பகுதி மேற்பரப்பில் இருக்கும் வகையில் இரண்டு லேயராக மடக்கி ஒட்டவும். இரவில் கரப்பான் பூச்சிகள் வெளியே வரும் போது, டேப்புகள் மீது ஒட்டிக் கொண்டு விடும். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு இதைச் செய்வது நல்லது. ஏனெறால், விளக்கை அணைத்த பிறகு தான் கரப்பான் பூச்சிகள் அதிகம் வெளியில் வரும்.
ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR