பிறர் கொட்டாவி விடுவதை பார்த்தும் நமக்கு கொட்டாவி வருவது ஏன்?

yawn symptoms : ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்ததும் நமக்கும் ஏன் கொட்டாவி வருகிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்கள் என்றால், அதற்கான விடையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 11, 2024, 01:50 PM IST
  • பிறர் விடும்போது கொட்டாவி நமக்கும் ஏன் வருகிறது?
  • மூளையில் இருக்கும் கண்ணாடி நியூரான்கள் காரணம்
  • கொட்டாவி நன்மை, தீமைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
பிறர் கொட்டாவி விடுவதை பார்த்தும் நமக்கு கொட்டாவி வருவது ஏன்? title=

கொட்டாவி ஏன் வருகிறது?

பிறர் கொட்டாவி விடுவதைப் பார்த்தும் நமக்கும் அடிக்கடி கொட்டாவி வரும். இது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் நடக்கும். இது குறித்தும் அறிஞர்கள் ஆய்வு நடத்தி ஆச்சரியமான முடிவுகளை பெற்றிருக்கின்றனர். பிறர் கொட்டாவி விடுவதை பார்த்ததும் கொட்டாவி வருவது என்பது குடும்ப உறுப்பினர்களிடையே தான் அதிகமாக இருக்கிறதாம். குடும்ப உறுப்பினர் கொட்டாவி விடுவதை பார்த்தும் கொட்டாவி வரும் எண்ணிக்கை அதிகம் என்றும், அதுவே அந்நியர்கள் என்றால் இந்த எண்ணிக்கை குறைவு தான் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் மூளையில் இருக்கும் கண்ணாடி நியூரான்கள் (Mirror Neurons) என தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க | இனி வெங்காயத் தோலை தூக்கி எறிய வேண்டாம்! இந்த விஷயங்களுக்கு உதவும்!

கண்ணாடி நியூரான்கள் என்றால் என்ன?

மிரர் நியூரான்கள் என்பது ஒரு நபர் ஒரு செயலைச் செய்யும்போதும், மற்றொருவர் அதைச் செய்ய தூண்டும் செல்கள். இந்த நியூரான்கள் மற்றவர்களைப் புரிந்துகொள்ளவும் பின்பற்றவும் உதவுகின்றன. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அனைவருக்கும் இந்த நியூரான்கள் செயல்படுவதில்லை. மன இறுக்கம் அல்லது ஸ்கிசோஃப்ரினியா போன்ற சில நரம்பியல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பிறர் கொட்டாவி விடுவதை பார்க்கும்போது அவர்களுக்கு கொட்டாவி வராது. ஆனால் அவர்களுக்கு வேறுவிதமான தூண்டுதல்கள் இருக்கும். 

கொட்டாவி நன்மைகள் என்ன?

கொட்டாவி விடுவது பல உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இது மூளையின் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. இரத்தத்திற்கு அதிக ஆக்ஸிஜனைக் கொண்டு வந்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் புத்துணர்ச்சியோடு இருப்பதை அதிகரிக்கிறது. கொட்டாவி விடுவதால் இந்த நன்மைகள் கிடைக்கிறதா என்றால், அது பெரும்பாலும் விவாதத்திற்குரிய தலைப்பு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

கொட்டாவி குறித்து தொடரும் ஆய்வுகள்

கொட்டாவி மூலம் மூளையின் செயல்பாட்டை அறிந்து கொள்ள மருத்துவ உலகில் இருக்கும் ஆய்வாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். மூளை கொட்டாவிக்கு எப்படி ரியாக்ட் செய்கிறது, அதனால் என்னென்ன செல்கள் எல்லாம் தூண்டப்படுகிறது, உடனடியாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன, அதன் நன்மை தீமைகள் மற்றும் அறிகுறிகள் குறித்தும் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். கொட்டாவி சோம்பேறி தனத்தின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. தூக்கமின்மை இருந்தாலும் கொட்டாவி வரும். மனச்சோர்வின் அறிகுறியாகவும் கொட்டாவி பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து ஆய்வுகள் இன்னும் தொடருகின்றன. 

மேலும் படிக்க | காலையில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் உடலில் பிரச்சனைகள் ஏற்படுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News