Boyfriend Rent News Tamil | உலகில் ஒவ்வொரு நாட்டிலும், ஊரிலும் பல விநோதமான பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படும் நிலையில், வியட்நாமில் பெண்கள் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்து பணிக்கு அமர்த்திக் கொள்ளும் நடைமுறை இருக்கிறது. இது உங்களுக்கு விநோதமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஆனால், குடும்பத்தில் திருமணத்தால் எழும் அழுத்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள பெண்கள் இந்த புதிய நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். திருமண உறவில் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் ஆண் நண்பர்களை (Boyfriend On Rent) வாடகைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.
ஏன் வாடகைக்கு எடுக்கிறார்கள்?
குறிப்பிட்ட வயது எட்டிய பெண்களுக்கு காதலன் இல்லை என்பதை ஒரு குற்றமாக அங்கு பார்க்கப்படுவதால் இது அவர்களுக்கு ஒரு அழுத்தமாக மாறிவிடுகிறது. இதனால், தாங்களும் ரிலேஷன்ஷிபில் இருப்பதாக காட்டிக் கொள்ள போலி காதலன் ஒருவரை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் குடும்பத்தில் பெண்களுக்கு எழும் அழுத்தமும் குறைந்துவிடும், சமூகத்தில் அவர்களுக்கான மரியாதையும் குறையாமல் இருக்கும். இதற்காகவே கவர்ச்சியாக இருக்கும் பயனை தேடிப் பிடித்து வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர் வியட்நாம் நாட்டின் இளம் பெண்கள்.
மேலும் படிக்க | பிரச்சனைகளை சிரித்துக்கொண்டே சமாளிக்க வேண்டுமா? ‘இந்த’ வழியை தெரிஞ்சிக்கோங்க..
தொழில்முறை காதலன் ஏன்?
பெண்களின் காதலர்கள் வீட்டில் இருக்கும் வேலைகளை கவனித்துக் கொள்வார்களாம். இது அங்கு பின்பற்றும் நடைமுறை. அதன்படி தொழில்முறை காதலர்களை நாடும்போது குடும்ப உறுப்பினர்களை நன்கு கவனித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு தேவையான விஷயங்களில் உதவியும் செய்து கொடுக்க வேண்டுமாம். இதன்மூலம் குடும்ப உறுப்பினர்கள் போலி காதலனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு நல்ல பையனை தேர்ந்தெடுத்துவிட்டாய் என பாராட்டு கொடுப்பார்களாம். இது பாராட்டு தான் வியட்நாம் பெண்களுக்கு சமூக அந்தஸ்து, கவுரவத்தை கொடுக்கிறதாம்.
வியட்நாம் பெண்களின் விளக்கம்
மின் து என்ற பெண் பேசும்போது, காதலன் ஒருவரை வாடகைக்கு எடுத்துக் கொண்டேன். அப்போது இருந்து என் குடும்பத்தில் என் மீதான பாசம் அதிகரித்துவிட்டது. எல்லோரும் என்னுடன் நன்றாக பழகுகிறார்கள். அம்மாவை அவர் நன்றாக கவனித்துக் கொள்கிறார். அம்மாவுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்து கொடுக்கிறார். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுப்பதை கடந்து குடும்பத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொண்டு வந்தது. இப்போது என்னுடைய திருமணம் பற்றிய கவலை பெற்றோர்களுக்கு இல்லை என்பதால் அவர்கள் நிம்மதியாக இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
தொழில்முறை காதலன் சொல்வது என்ன?
தொழில் முறை காதலனாக பணியாற்றும் ஹூய் துவான் பேசும்போது, " வியட்நாமில் தொழில்முறை காதலன் என்பது சிறிய தொழிலாகவே மாறிவிட்டது. எனக்கு 25 வயதாகுகிறது. நான் தொழில்முறை காதலன் சேவையை வழங்குகிறேன். என்னை வாடகைக்கு எடுப்பவர்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களையும் செய்ய வேண்டும் என்பதற்காக உடல் ரீதியாகவும் தயாராக இருக்கிறேன். ஜிம்முக்கு செல்கிறேன். காதலி வீட்டு வேலைகளையும் செய்வேன். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது மட்டுமே என்னுடைய வேலை" என கூறியுள்ளார்.
அதேநேரத்தில் வாடகை காதலன் முறைக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் அந்நாட்டு அரசு கொடுக்கவில்லை. குடும்பத்தில் ஏற்படும் இழப்புகள், பிரச்சனைகளை கையாள்வதற்கு இந்த முறை ஒரு நிவாரணமாக இருப்பதாக அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர்.
மேலும் படிக்க | பொய்யான நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 5 அறிகுறி இருக்கான்னு பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ