Weight Loss Lifestyle Tips: உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் பருமன் ஆகியவை உலகளவில் தொடர்ந்து உடல்நிலை சார்ந்து பேசப்படும் முக்கிய விஷயமாக இருக்கிறது. அதே வேளையில் உடல் எடை குறைப்பு என்பதும் அதிகளவில் மக்களிடத்தில் கவனத்தை பெறுகிறது. உடல் பருமன் என்பது ஒரு நோயோ, குறைபாடோ இல்லை என்றாலும், உடல் பருமன் பல்வேறு நோய்களுக்கும், குறைபாட்டுக்கும் இட்டுச்செல்லும்ஸ என்பதால் அதுகுறித்து பல்வேறு எச்சரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.
அதே நேரத்தில் உடல் பருமனை ஆரோக்கியமான முறையில் குறைப்பதே நிபுணர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைவராலும் பரிந்துரைக்கப்படுகிறது. உடல் எடையை குறைக்க (Weight Loss) எந்த ஒரு குறுக்குவழியையும் பயன்படுத்த வேண்டியதில்லை. அந்த வகையில், கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் மருத்துவர் ஒருவரின் உடல் எடை குறைப்பு குறித்த X தளப்பதிவு என்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
X கணக்கில் Dr_Vee என்ற பெயரை கொண்ட அந்த பெண் மருத்துவர், ஒரு சிறு நிகழ்வை அந்த பதிவில் விவரித்து, உடல் எடை குறைப்பு எப்படி தனது வாழ்வையே மாற்றியது என்பதையும் அந்த பதிவில் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, அந்த பெண் அவரது உடல் பருமன் புகைப்படங்களையும், தற்போதைய உடல் எடை குறைப்புக்கு பிந்தைய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | உங்கள் உடலுக்கு இந்த காரணங்களுக்காக வைட்டமின் பி12 கண்டிப்பாக தேவை!
120 கிலோவில் இருந்த பெண்...
அந்த பெண் மருத்துவர் ஒரு கட்டத்தில் 120 கிலோ எடையோடு இருந்துள்ளார். தற்போது அதில் இருந்து உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள அவர், பெங்களூரு மெட்ரோவில் நடந்த ஒரு சிறு நிகழ்வையும் இப்படி விவரிக்கிறார்."இன்று (அதாவது ஜூலை 16) மெட்ரோவில் ஒரு சிறிய சம்பவம் நடந்தது. நான் கீழ் தளத்தில் வந்துகொண்டிருந்த போது மேல் தளத்தில் மெட்ரா ரயில் வரும் சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது.
A little incident from earlier today at the metro station- I was still on the lower level when I heard the train reach the platform above me. Announcements were made and I saw the alighted passengers coming down the stairs. I didn't want to wait for the one. (1/n) pic.twitter.com/fdgDmsjcGR
— dr_vee (@dr_vee95) July 16, 2024
ரயில் வந்துவிட்டதன் அறிவிப்பும் எனக்கு கேட்கிறது, அந்த ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளையும் என்னால் பார்க்க முடிந்தது. ஆனால், அடுத்த ரயில் வரும் வரை நான் காத்திருக்க விரும்பவில்லை, அடுத்த 5-10 வினாடிகளில், முதுகு பின்னால் இருந்து கனமான பேக்பேக்குடன் குடுகுடுவென வேகமாக அந்த உயராமான படிகளை ஏறி, கூட்டத்தை தாண்டி கதவு மூடுவதற்கு அந்த மெட்ரோ ரயிலேயே ஏறிவிட்டேன்" என்றார்.
இதுதான் ஃபிட்னஸ்...
மற்றொரு பதிவில் இந்த சம்பவத்தை மேலும் தொடர்ந்த அவர்,"முன்பு 120 கிலோவில் இருந்தபோது இப்படி ஒரு நிகழ்வை யோசித்துக் கூட இருக்க முடியாது, அப்போது ஒரு பாண்டாவை போல் இருந்தேன். நான் தினமும் கடினமாக உழைத்தேன், இன்றும் அப்படிதான். எனது உடல்நிலையிலும், உடற்தகுதியிலும் நான் நிறைய செலவிடுகிறேன்.
I work hard everyday, even to this day & invest a lot in my health & fitness. I may not have a perfect body but I am healthy enough to be there for my family, friends & my patients & do my best for them. And THAT, in my opinion, is what fitness and functionality is all about(n/n)
— dr_vee (@dr_vee95) July 16, 2024
எனக்கு கச்சிதமான உடல் அமைப்பு இல்லாவிட்டாலும் எனது குடும்பத்துடன், நண்பர்களுடன், எனது நோயாளிகளுடன் இருந்து அவர்களுக்கு என்னால் இயன்றதை செய்ய முயற்சிப்பேன். ஃபிட்னஸ் மற்றும் செயல்பாடு என்பது இதுதான் என நினைக்கிறேன், இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான்" என்கிறார். இவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் இவரது கடின உழைப்பை பாராட்டி வியந்து வருகின்றனர். கமெண்ட்ஸ்களிலும் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதன் படிப்பினை என்ன?
அந்த மருத்துவரின் பதிவு மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இவற்றைதான்: நீங்கள் உடல் எடை அதிகமாக இருக்கிறீர்கள் என நினைத்து கவலைப்படவோ அல்லது நம்பிக்கை இழக்கவோ வேண்டாம். மருத்துவ ரீதியாக நீங்கள் உடல் பருமனுடன் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம். அதே நேரத்தில், ஆரோக்கியமற்ற சூழலால் உடல் பருமன் அதிகமானால் தொடர்ச்சியாக உடல்நலன்சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இது அந்த பதிவரின் கருத்தை மக்களிடையே தெரிவிப்பதற்கு எழுதப்பட்டதே அன்றி எந்தவொரு உடல் எடை குறைப்பு குறித்த டிப்ஸ்களையும் வழங்குவதற்கு அல்ல. இவற்றை Zee News உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ