பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதல் பதவிக் காலத்தில், 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில், முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
அதன் பிறகு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 4 நாட்களில் 2,000 ரூபாய் நோட்டு அறிமுகமானது. அப்போது வங்கிகளிலும், ஏடிஎம்களிலும், 2,000 ரூபாய் நோட்டுக்கள் தான் அதிகம் கிடைத்தன. இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இப்போது 2,000 ரூபாய் நோட்டுகளைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. ஏடிஎம்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்பதை பலர் கவனித்து இருக்க கூடும். அதற்கான காரணம் ஏன் என்பதை இந்திய ரிடர்வ் வங்கி விளக்கியுள்ளது
மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் புழக்கத்தில் இருந்த மொத்த கரன்சிகளுக்கு எதிராக புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2 சதவீதமாக இருந்ததில் இருந்து, தற்போது 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால்தான் ஏடிஎம்களில் 2000 நோட்டுகள் மிக அரிதாக கிடைக்கின்றன.
2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் இறுதி வரையிலான காலகட்டத்தில், மொத்த கரன்சி நோட்டுகளில் அவர்களின் பங்கு 214 கோடி அல்லது 1.6 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் படிக்க | Financial Tips: பணத்தை திட்டமிட்டு சேமித்து பணக்காரர் ஆக சில டிப்ஸ்
இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை அனைத்து மதிப்பிலான நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 13,053 கோடியாக இருந்தது. இதற்கு ஓராண்டுக்கு முன், இதே காலத்தில், இந்த எண்ணிக்கை, 12,437 கோடியாக இருந்தது. புழக்கத்தில் குறைவாக இருந்தாலும் ரூ.2000 ஆயிரம் நோட்டு மீண்டும் அச்சிடப்படாது என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்து விட்டது.
ஆண்டறிக்கையில், “இந்தியாவில் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி தயாராகி வருகிறது. CBDC இன் வடிவமைப்பு, பணவியல் கொள்கை, நிதி நிலைத்தன்மை மற்றும் பணம் மற்றும் கட்டண முறைகளின் திறமையான செயல்பாடு ஆகியவற்றின் கூறப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில், சப்ளை தொடர்பான தடைகளை நீக்கவும், பணவீக்கத்தைக் குறைக்கவும், மூலதனச் செலவை அதிகரிக்கவும் பணவியல் கொள்கையை சீர் செய்வதன் \ மூலம் எதிர்கால வளர்ச்சிப் பாதை தீர்மானிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளது. "இந்தியாவின் நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்த, நிலையான, சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் முக்கியமானவை" என்று அறிக்கை கூறியுள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வாகன எரிபொருட்கள் மீதான கலால் வரி குறைப்பு, எஃகு மற்றும் பிளாஸ்டிக் தொழிலில் பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை நீக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு சமீபத்தில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள்கள், காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வால் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 15.08 சதவீதத்தை எட்டியது. அதே நேரத்தில், சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதத்தை எட்டியுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இந்த மாதம் ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, ஜூலை ஊதியத்தில் பம்பர் ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR