ஒரு உறவுக்குள் சண்டை வருவது என்பது சாதாரணமான ஒன்று தான், சண்டைபோடாமல் எந்தவொரு உறவும் இருக்கமுடியாது. எவ்வளவு தான் தன்மையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் செல்ல சண்டையாவது வராமல் இருக்காது, அப்படி சண்டையே வராவிட்டால் அந்த உறவு உப்புச்சப்பில்லாத உணவை போன்று தான் இருக்கும். குறிப்பாக காதலர்களுக்குள்ளோ அல்லது கணவன்-மனைவிக்குளோ சண்டைக்கு பிறகு ஏற்படும் சமாதானம் என்பது சுவாரஸ்யமான ஒன்று, சண்டைக்கு பின் வரும் சமாதானம் ஆகசிறந்த போதை என்று கூட சொல்லலாம். உறவில் வரும் சிறு சிறு ஊடல், அதன்பின் ஏற்படும் சிறு சிறு கூடல் என சண்டை வந்தபின் உறவு பலப்படும், ஆனால் அந்த சண்டையை பெரிதாக்காமல் செல்ல சண்டையாக முடித்துவிடுவது நல்லது. சண்டை முடிந்த பின்னர் சில விஷயங்களை நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் உறவு கூடுதலாக பலப்படும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை: இந்த நேரத்தில் உங்கள் லவ்வருக்கு மெசேஜ் பண்ணாதீங்க!
1) உங்கள் துணையுடனான வாக்குவாதம் முடிந்த பிறகு அமைதியாக அமர்ந்து ஒருவரை பற்றி ஒருவர் குறைகூறாமல், சண்டையின்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது, எப்படி உணர்ந்தீர்கள் என்பதை பற்றி வெளிப்படையா பேசுங்கள்.
2) சுயநலமாக இருக்காமல் உங்கள் துணையின் கருத்துக்களையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
3) சண்டை ஆரம்பமாவதற்கு உங்களை தூண்டியது எது, நீங்கள் எதனால் தூண்டாடுகிறீர்கள் என்பதை பற்றி இருவரும் பேசுங்கள், மேலும் அதுபோன்று எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
4) நீங்கள் உங்களை அறியாமலேயே ஒரு தப்பை செய்துவிட்டீர்கள் என்றால் அதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், அதனை விடுத்து வேறெதுவும் செய்வது சண்டைக்கு வழிவகுக்கும்.
5) பொதுவாக உணர்ச்சி அதிகமாக இருக்கும் சமயத்தில் நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் தவறாகவே போய்டுவிடும், அதனால் சண்டைக்கு பிறகு எவ்வித முடிவையும் எடுக்காமல் கொஞ்சம் அமைதியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | உங்கள் துணையிடம் இந்த விசயத்தை மட்டும் பண்ணிடாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ