அமேசான் நிறுவனர் CEO பொறுப்பிலிருந்து Jeff Bezos விலகுகிறார்: காரணம் என்ன?

அமேசான் நிறுவனத்தை நிறுவியதிலிருந்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகால பயணத்தில், தற்போது ஜெஃப் பெசோஸ் தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 3, 2021, 11:51 AM IST
  • ஜெஃப் பெசோஸ் செவ்வாயன்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
  • அமேசான் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக பெசோஸ் பொறுப்பேற்பார்.
  • அமேசானின் கிளவுட் பிரிவின் தலைவர் அமேசான் வலை சேவைகள் (AWS) அண்டி ஜாஸ்ஸி அமேசானின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பார்.
அமேசான் நிறுவனர் CEO பொறுப்பிலிருந்து Jeff Bezos விலகுகிறார்: காரணம் என்ன?  title=

New Amazon CEO: அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) செவ்வாயன்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டின் நிதி அறிக்கையை வெளியிடும் போது, தனது பதவி விலகல் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். அதற்கான காரணத்தை விளக்கும் விதமாக நீண்ட கடிதத்தையும் அவர் எழுதியுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை ஒரு மின்னஞ்சல் மூலம் பெசோஸ் தனது ஊழியர்களுக்கு தெரிவித்தார்.

அமேசான் வெப் சேவைகள் (Amazon Web Services) தலைவராக உள்ள 52 வயதான அண்டி ஜாஸ்ஸி (Andy Jassy) தான் மொத்த அமேசான் நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார். 

ALSO READ | அடுத்த 5 ஆண்டுகளில் அமேசான் 10 லட்சம் வேலைகளை வழங்க உள்ளது.

தனது கடிதத்தில் புதிய தயாரிப்புகள் மற்றும் முன்முயற்சிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக பெசோஸ் கூறினார். அவர் அமேசானில் மிகப்பெரிய பங்குதாரர். எனவே தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய போதிலும், அவர் நிறுவனத்தின் மீது நிறைய கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார். 

செப்டம்பர் 2020 இல், ஃபோர்ப்ஸின் பணக்கார அமெரிக்கர்களின் பட்டியலில் (Forbes list of Richest) ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்தார். ஒரே நாளில் 5.22 பில்லியன் டாலர் அதிகரித்ததன் பின்னர் அவரது நிகர மதிப்பு 202 பில்லியன் டாலர்களைக் கடந்தது. இருப்பினும், இந்த ஆண்டு, டெஸ்லா மேலாளர் எலோன் மஸ்க் (Elon Musk) பெசோஸைக்கை பின்னுக்கு தள்ளி உலகின் பணக்காரர் ஆனார். எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு இப்போது 195 பில்லியன் டாலர்களைத் தாண்டியது, பெசோஸ் நிகர மதிப்பு 185 பில்லியனாக இருந்தது.

ALSO READ | Elon Musk உலகின் பணக்காரர் ஆனது எப்படி தெரியுமா?

"புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாஸ்ஸி என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டி ஜாஸ்ஸி நிறுவனத்திற்குள் நன்கு அறியப்பட்டவர். அவர் ஒரு சிறந்த தலைவராக இருப்பார். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று பெசோஸ் தனது ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News