உடல் எடை மளமளவென குறைய தினம் காலையில் நெய்யை இப்படி சாப்பிடுங்கள்

Hot Ghee Benefits: வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் நெய்யை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறையும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.  இதற்கு எப்படி எப்போது நெய் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 19, 2024, 05:08 PM IST
  • சூடான நெய்யில் குறுகிய கொழுப்பு அமிலங்கள் மட்டுமே உள்ளன.
  • உடலில் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு பங்களிக்கின்றன.
  • இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
உடல் எடை மளமளவென குறைய தினம் காலையில் நெய்யை இப்படி சாப்பிடுங்கள் title=

உடல் எடை குறைய நெய் சாப்பிடுங்கள்: பொதுவான பரபரப்பான வாழ்க்கை முறையில் காலையில் வாக்கிங் அல்லது ஜாகிங் செல்வது மிகவும் கடினம். இதனால் உடல் எடையை குறைவதும் கடினம்.  இந்நிலையில், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பாக இருக்கும் சுத்தமான பசு நெய் ஒன்று போதும். இவை அடிவயிறு, தொடைகள் மற்றும் கழுத்து பகுதிகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பை அகற்ற உதவும். பொதுவாக நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற நாம் கருதுகிறோம். ஆனால் காலையில் சரியான அளவில் வெதுவெதுபாக இஎஊக்கும் நெயை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நெய் ஒரு சூப்பர் உணவாகும். ஏனெனில் இவை ஆரோக்கியம் முதல் மருத்துவ நோக்கங்கள் வரை ஒட்டுமொத்த நன்மைகளை ஒரேடியாக வழங்குகிறது. எனவே இப்போது உடல் எடையை எளிதாக குறைக்க காலையில் நெய்யை எப்படி சாப்பிட்ட வேண்டும் என்பதை தெறித்து கொள்ளுங்கள். 

உடல் எடையை குறைய நெய் :
சூடான நெய்யில் குறுகிய கொழுப்பு அமிலங்கள் மட்டுமே உள்ளன, இவை உடலில் வெப்பத்தை உருவாக்க உதவும் மற்றும் கலோரிகளை எரிக்க உதவும் செயல்முறையான தெர்மோஜெனீசிஸைத் தூண்டும். நெய் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தவும், கொழுப்பை அகற்றவும் உதவும். சூடான நெய் ப்யூட்ரேட்டின் மூலமாகும், இது ஒரு வகையான குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியமாக உதவுகிறது. இதனால் சூடான நெய் குடலுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி உடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை நெய் ஊக்குவிக்கிறது. இவை அனைத்தும் உடலில் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு பங்களிக்கின்றன.

மேலும் படிக்க | Asafoetida: உணவில் தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயம் செய்யும் ஆரோக்கிய மாயம்! டிரை பண்ணி பாருங்க!

இந்நிலையில் நீங்கள் தினமும் காலையில் வெதுவெதுப்பான நெய் சாப்பிட்டு வந்தால் வயிற்று பசியை குறைத்து, மனநிறைவை மேம்படுத்தவும் உதவும். இதனால் தேவையற்ற கலோரி உட்கொள்ளலை தவிர்க்க முடிகிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நெய்யில் உள்ள மூலக்கூறுகள் ஹார்மோன்களின் வெளியீட்டைத் தூண்டி, சாப்பிட திருப்தியை உணரவும், அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும் உதவுகிறது. சூடான நெய்யில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் ஒரு நிலையான ஆற்றல் மூலத்தை வழங்குகிறது. இவை ஆற்றலாக மாற்றப்பட்டு, ஒரு நாளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. சூடான நெய்யில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும். நெய் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

எனவே இனி உடல் எடையை குறைக்க தேவையற்ற பவுடர்கள் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக தினமும் காலையில் சூடான நெய்யை சாப்பிடலாம். காபி அல்லது டீயில் ஒரு ஸ்பூன் சூடான நெய்யைச் சேர்த்து குடிக்கலாம். உங்கள் காலை உணவில் நெய்யை சேர்த்து சமைக்கலாம். எனினும் நெய்யை மிதமான அளவு பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.  மேலும், பால் மற்றும் நெய் நல்ல மாய்ஸ்சரைசர்கள் ஆகும். இவை சருமம் மற்றும் கூந்தலின ஆரோக்கியத்தை மேம்படுத்த மீண்டும் உதவுகிறது. அதேபோல் மஞ்சள் பாலில் நெய் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவாகும். நெய்யில் உள்ள பியூட்ரிக் ஒரு கொழுப்பு அமிலமாகும், இது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நெய்யை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது, செரிமானப் பண்புகளை அதிகரிக்கிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News