கேரளா சுற்றுலா செல்ல பிளானா.... அப்ப இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!

Kerala Tourism: தென்னிந்தியாவின் கேரளா மாநிலம் மிகவும் இயற்கை அழகு நிறைந்தது என்பதால், கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது. சுற்றுலா செய்வதற்கு கேரளாவை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்க இதுவே காரணம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 22, 2024, 06:24 PM IST
  • கேரளாவின் இயற்கை அழகு, உங்களை மீண்டும் மீண்டும் அங்கு செல்லத் தூண்டும் வகையில் இருக்கும்.
  • இயற்கை அழகு நிறைந்தது என்பதால், கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது.
  • கேரளாவில் உள்ள சில அற்புதமான இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கேரளா சுற்றுலா செல்ல பிளானா.... அப்ப இந்த செய்தி உங்களுக்குத் தான்..!! title=

Kerala Tourism: தென்னிந்தியாவின் கேரளா மாநிலம் மிகவும் இயற்கை அழகு நிறைந்தது என்பதால், கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது. சுற்றுலா செய்வதற்கு கேரளாவை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்க இதுவே காரணம்.  இங்கே நீங்கள் கண்டு களிக்க பல இடங்கள் உண்டு. புதுமணத் தம்பதிகளும் கூட தேனிலவுக்கு கேரளா வர விரும்புகிறார்கள். இது தவிர கேரளாவில் பிரசித்தி பெற்ற ஏராளமான கோவில்கள் இருப்பதால், அதற்காகவும் அதிக அளவில் மக்கள் வருகின்றனர். 

கேரளாவில் மலைவாசஸ்தலங்களையும் காணலாம். கேரளாவின் இயற்கை அழகு, உங்களை மீண்டும் மீண்டும் அங்கு செல்லத் தூண்டும் வகையில் இருக்கும். இன்று கேரளாவில் உள்ள சில அற்புதமான இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நீங்கள் கேரளாவிற்கு செல்ல திட்டமிடுவதாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

கேரளாவின் சிறந்த சுற்றுலா இடங்கள்

வயநாடு

வயநாடு கேரளாவில் பார்க்க வேண்டிய சிறப்பான இடங்களில் ஒன்றாகும். வயநாடு ஒரு மலைவாசஸ்தலம். இது கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வயநாடு தேயிலை மற்றும் மசாலா எஸ்டேட்களால் சூழப்பட்டுள்ளது. இங்கே கண்டு களிக்க பல இடங்கள் உள்ளன. இங்குள்ள வானிலை மனதற்கு இதமானதாக இருக்கும். புதுமணத் தம்பதிகளும் தேனிலவுக்கு இங்கு வர விரும்புகிறார்கள்.

வர்கலா

வர்கலா கேரளாவில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்றாகும். வர்கலாவில் நீங்கள் யாத்திரை தலங்கள், கோட்டைகள், இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றைக் காணலாம். கேரளாவில் அரபிக்கடலை ஒட்டிய பாறைகள் உள்ள ஒரே இடம் வர்கலா. வர்கலா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகும். வர்கலாவுக்குச் சென்றால், நீங்கள் வர்கலா கடற்கரை, ஜனார்த்தன சுவாமி கோயில், விஷ்ணு கோயில், சர்க்கரா தேவி கோயில், வர்கலா மீன்வளம் மற்றும் வர்கலா சுரங்கப்பாதை ஆகியவற்றை நிச்சயம் காண வேண்டும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டம் இங்கு செல்ல சிறந்த நேரம் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விருதுநகருக்கு‌ அருகில் உள்ள எழில் கொஞ்சும் சாயல்குடி கடற்கரை...மிஸ் பண்ணாதீங்க!!

தேக்கடி

தேக்கடி கேரளாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் ஒன்றாகும். தேக்கடி கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று. இயற்கை ஆர்வலர்கள் இந்த இடத்தை மிகவும் விரும்புகிறார்கள். தேக்கடி இந்தியாவின் மசாலாத் தலைநகராகவும் அறியப்படுகிறது. இது குறிப்பாக தேயிலை, காபி மற்றும் மசாலா தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. பெரியார் ஏரி மற்றும் பெரியார் வனவிலங்கு சரணாலயம் இங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டம் இங்கு செல்ல சிறந்த நேரம்.

மூணாறு

கேரளாவில் மிகவும் அழமான இடமான மூணாறு கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. உயரமான மேகங்கள், அழகான மலைகள் மற்றும் வளைந்த மலைகள் ஆகிய கண்கவர் காட்சிகள் மூணாரை முக்கிய இடமாக மாற்றியுள்ளது. இங்கே நீங்கள் மலையேற்றம், கேம்பிங் மற்றும் படகு சவாரி போன்ற நடவடிகைகளை மேற்கொள்ளலாம். மூணாறுக்கு ஏராளமான இயற்கை மற்றும் சாகச ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர். நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டம் இங்கு செல்ல சிறந்த நேரம். புதுமணத் தம்பதிகளும் தேனிலவுக்கு இங்கு வர விரும்புகிறார்கள்.

ஆலப்புழை

கேரளாவில் உள்ள ஆலப்புழைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக சுற்றுலா பயணிகள் இங்கு படகு வீடுகளில் தங்கவும் ரசிக்கவும் அதிகம் வருகிறார்கள். இந்த இடம் தேனிலவுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அலப்புழா கிழக்கின் வெனிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டம் இங்கு செல்ல சிறந்த நேரம். வேம்பநாடு ஏரி, மராரி கடற்கரை, ஆலப்புழா கடற்கரை, செயின்ட் மேரிஸ் தேவாலயம் போன்றவை இங்கு பார்க்க சிறந்த இடங்களாகும்.

மேலும் படிக்க | குறைந்த செலவில் அந்தமான் டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News