Watching Excessive Food Reels Bad For Health: முன்பெல்லாம் காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களை படிப்பது ஒரு வழக்கமாக இருந்தது. அதுவே நாளடைவில் காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து செய்திகளையோ அல்லது வேறு நிகழ்ச்சிகளையோ பார்க்கும் பழக்கமாக மாறியது. அது இப்போது யூ-ட்யூப், பேஸ்புக், வாட்ஸ்அப் வீடியோக்களை தாண்டி யூ-ட்யூப் ஷார்ட்ஸ் மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ் ஆக உருமாறிவிட்டது.
காலையில் மெத்தையில் இருந்து எழுந்த உடன் மொபைலில் உங்கள் கைகள் இன்ஸ்டாகிராமுக்கோ, யூ-ட்யூப்புக்கோ சென்ற ரீல்ஸ், ஷார்ட்ஸை தான் தேடும். காலையில் எழுந்து ஒரு 50 ரீல்ஸ்களாவது கீழே தள்ளித் தாண்டினால்தான் அடுத்த வேலையே சிலருக்கு ஓடும். இந்த அதிபயங்கர பழக்கம் குறித்து அதிர்ச்சித் தரும் ஒரு தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
படுக்கை முதல் பாத்ரூம் வரை
இப்போதெல்லாம் ரீல்ஸ், ஷார்ட்ஸ் என எதை எடுத்தாலும் உணவு சார்ந்த வீடியோக்களே அதிகம் வரும். நீங்கள் கழிவறையில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்தாலும் சரி, கொடூர பசியில் படுத்திருக்கும்போதும் சரி உங்களை சொதிப்பதற்கே என்றே, 'Guys, இப்போ நாம எங்க வந்திருக்கோம்னா' என வகை வகையான உணவுகளை வீடியோ முழுவதும் காட்டுவார்கள்.
மேலும் படிக்க | டீ குடித்தால் தலைவலி சரியாகுமா... இது உண்மையா, பொய்யா...?
இதுபோன்ற உணவுகள் சார்ந்த ரீல்ஸ்களை பார்ப்பவர்களை பல வகைகளில் பிரிக்கலாம். அதில் முக்கியமானவை என்றால், வீட்டில் சமைக்க டிப்ஸ் கொடுக்கும் வீடியோக்கள், அல்லது புதிய புதிய உணவு வகைகளை கொண்ட உணவகங்கள், ஒரு ஊரில் அதிகம் பிரபலமான உணவகங்கள் இப்படியான உணவுகளை பார்க்க முடியும். இதை பார்த்து சிலர் வீட்டில் அந்த உணவுகளை சமைத்து பார்ப்பார்கள். உணவகங்களை குறித்துவைத்துக் கொண்டு நண்பர்களுடனோ, குடும்பத்தோடோ அங்கு செல்வதற்கு திட்டமிடுவார்கள்.
வரும் பிரச்னைகள்
இன்னும் சிலருக்கு இவற்றை சாப்பிட வேண்டும் என எண்ணமே இருக்காது, இருந்தாலும் வீடியோவை முழுவதுமாக பார்ப்பார்கள். அவர்கள் டயட்டில் இருந்தாலும் சரி, அவற்றை முழுமையாக பார்ப்பார்கள். வீடியோவை பார்ப்பதால் என்னவாகப் போகிறது என்ன நினைக்கிறீர்களா... இல்லை அங்குதான் பிரச்னையே தொடங்குகிறது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
இதுபோன்று உணவு சார்ந்த அதிக ரீல்ஸ் பார்ப்பதால் உணவு குறித்த உங்களின் ரசனை மாறும் சரிதான். ஆனால், இவை உங்களின் உணவுக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்து அதிகமாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் வல்லுநர்கள். தொடர்ந்து உணவுகளின் அழகான வீடியோவை பார்ப்பதால் மூளையில் அதிக டோப்போமைன் சுரக்கும். மகிழ்ச்சியான உணர்வுகளை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள். ஆனால், காட்டப்படும் உணவுகளை ஒருவேளை நீங்கள் வாங்காவிட்டால் நீங்கள் குற்றவுணர்ச்சிக்கு தள்ளப்படுவீர்கள். இதுவும் பிரச்னைதான்.
ரீல்ஸ் பார்த்தால் வெயிட் போடும்...
பெரும்பாலான வீடியோக்கள் அதிக கலோரி உள்ள உணவுகள் அல்லது துரித உணவுகளை பரிந்துரைக்கின்றன. இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து நீங்கள் பார்த்தால் அது உங்களின் பழக்கத்தில் இயல்பான ஒன்றாகிவிடும். அந்த உணவுகளை குறித்து துளியும் யோசிக்காமல் வாங்கிச் சாப்பிட மனதை தூண்டும். இதனால் சுய கட்டுப்பாடு சீரழியும்.
இதுபோன்று எப்போதும் உணவு ரீல்ஸ்களை பார்த்துக்கொண்டிருந்தால் வேலை இல்லாமல் அயர்ச்சியாக இருக்கும் நேரம் தொடங்கி, ஓய்வு நேரங்களில் கூட அந்த உணவுகளை சாப்பிட தூண்டப்படுவீர்கள். இது மோசமான உணவுப் பழக்கவழக்கத்துக்கு இட்டுச்செல்லும். மோசமான உணவுப் பழக்கவழக்கம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதுவும் வாழ்க்கை முறையில் மோசமான மாற்றம், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.
எனவே, இனிமேல் உணவு ரீல்ஸை சும்மா கூட அடிக்கடி பார்ப்பதை தவிருங்கள். ரீல்ஸ் பார்ப்பது தவறில்லை என்றாலும் எல்லையை தாண்டிவிட்டால் அதன்பின் தடுப்பது சிரமமாகிவிடும். அந்த வகையில், ரீல்ஸ் பார்க்கும்போது எதை பார்க்கிறோம், எதை அதிகம் பார்க்கிறோம், எதற்கு நமது மூளை அதிகம் ஈடுபாடு காட்டுகிறது என்பதை தெரிந்துகொண்டால் சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க | அலாரம் வைக்காமல் அதிகாலையில் எழுவது எப்படி? ‘இந்த’ ஈசியான விஷயத்தை செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ