WATCH: ஹிந்தி பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடி பட்டைய கிளப்பிய பாட்டிகள்...

சூப்பர் ஹிட் ஹிந்தி பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடி அசத்திய இரண்டு பாட்டிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!

Last Updated : Sep 1, 2020, 01:10 PM IST
WATCH: ஹிந்தி பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடி பட்டைய கிளப்பிய பாட்டிகள்...  title=

சூப்பர் ஹிட் ஹிந்தி பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடி அசத்திய இரண்டு பாட்டிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், சூப்பர் ஹிட் ஹிந்தி பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடி அசத்திய இரண்டு பாட்டிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ | ஆசியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள நாடு இந்தியா..! 

சுமார் 15 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை @peechetodekho என்ற ட்விட்டர் பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சேலை காட்டிய இரண்டு வயதான பெண்கள் ஆஷா போஸ்லேவின் 1971 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் பாடலான பியா து அப் தோ ஆஜா பாடலுக்கு (Piya Tu Ab Toh Aaja) ஒரு தெருவில் நடனமாடினர். ஒரு மனிதன் சுருக்கமாக பெண்களுடன் சேர்ந்தார், ஆனால் இருவரும் பின்வாங்கினர். இந்த வீடியோவை அவர் "இது மிகவும் அழகாக இருக்கிறது," என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

வீடியோவை இங்கே பாருங்கள்:

பியா து ஆப் ஆஜா இசையமைத்தவர் ஆர்.டி.பர்மன் மற்றும் ஹெலன் நடித்தார். ஜீதேந்திரா மற்றும் ஆஷா பரேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கேரவன் படத்திலிருந்து இந்த பாடல். 

இரண்டு பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் வீடியோ கிட்டத்தட்ட 3,000 முறை பார்க்கப்பட்டது மற்றும் பல லைக்குகளையும் மறு ட்வீட்ஸையும் பெற்றது. "தில் தோ பச்சா ஹை ஜி," ஒரு பயனர் கருத்துகள் பிரிவில் கூறினார். மற்றொரு கருத்து, "ஆஹா. தில் குஷ் ஹோகயா" என்று எழுதப்பட்டுள்ளது.

Trending News