கோவா போனா இந்த வேலைகளை மட்டும் கண்டிப்பா பண்ணிடாதீங்க..

பார்ட்டி மாநிலமான கோவாவுக்கு போறவங்க பெரும்பாலும் என்ன வேணாலும் பண்ணலாம்னு நினைச்சுதான் போவாங்க. அவங்க என்ன எல்லாம் பண்ணாக்கூடாதுனு பார்க்கலாம்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Apr 20, 2022, 12:17 PM IST
  • கோவாவுல போய் பண்ணலாம்னு நினைக்காதீங்க
  • இந்தியா சட்டங்கள்தான் கோவாலயும்
  • நீங்க நினைக்குறதை தவிர்க்குறது நல்லது
கோவா போனா இந்த வேலைகளை மட்டும் கண்டிப்பா பண்ணிடாதீங்க.. title=

கோவா ரொம்பவே வெளிப்படையான முற்போக்கான மாநிலம்னாலும் இந்தியாவுல இருக்கற எல்லா விதிகளும் சட்டங்களும்தான் கோவாவுலயும் இருக்கு. குறிப்பா சமீப காலங்கள்ல சட்ட விதிமீறல்களை கண்டுபிடிச்சு கண்டிப்பான தண்டனை குடுத்துட்டு இருக்காங்க காவல்துறை. அதனால கோவா போறதுக்கு முன்னாடி என்ன எல்லாம் அங்க பண்ணிட கூடாதுனு தெரிஞ்சுக்கிட்டு போங்க.

பாலியல் தொழில்

பொதுவா சுற்றுலா தளங்களுக்கும் கோவா மாதிரியான மாநிலங்களுக்கும் போறவங்களுக்கு அங்க பாலியல் தொழில் கொடிகட்டி பறக்குதுனு ஒரு மனநிலை இருக்கும். அது ஒருவகையில் உண்மைதான்னாலும் காவல்துறையும் கோவா அரசாங்கமும் இதை தடுக்குறதுல ரொம்ப தீவிரமா இருக்காங்க. சட்டவிரோதமா பாலியல் தொழில்ல ஈடுபடுறவங்களும், அவங்களோட தொடர்பு கொள்றவங்களும் ஜெயிலுக்கு போறதுக்கான வாய்ப்பு நிறைய இருக்கு.

Goa

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்

பாலியல் தொழில் விவகாரத்துல என்ன நடக்குதோ அதேதான் போதை பொருள் விவகாரத்துக்கும். மது குறைந்த விலையில கிடைக்குதுங்கறதுக்காக எல்லா வகை போதைப் பொருளும் கிடைக்குதுனு நினைக்குறது தப்பு. பலதரப்பட்ட போதைப் பொருள் ஈசியா கிடைச்சாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டி வரும். தவிர்க்குறது நல்லது.

மேலும் படிக்க | எமனை ஏமாற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நாய்! எத்தனை வயது தெரியுமா?

பொது இடத்தில் பேசுதல்

கோவா மாதிரியான சுற்றுலா தளங்கள்ல உங்களை ஏமாத்துறதுக்கு நிறைய பேர் ரெடியா இருப்பாங்க. குறிப்பா பாலியல் தொழில், போதைப் பொருள் உள்ளிட்ட விவகாரங்கள் வேணுமானு பலர் ரோட்டுலயே உங்ககிட்ட கேப்பாங்க. அவங்க கிட்ட பேசாம கடந்து போறதுதான் நல்லது. நல்லா தெரிஞ்ச நபர்கள் கிட்ட மட்டும் தொடர்பு வெச்சுக்கோங்க. உங்களுக்கு தேவையான உதவிகளை அவங்க கிட்ட மட்டும் கேளுங்க.

Goa

மது பாட்டில்கள்

மது பாட்டில்கள் குறைந்த விலைக்கு கிடைக்குறனால அதை வீட்டுக்கு வாங்கிட்டு வந்துடலாம்னு பல பேர் நினைப்பீங்க. மதுபானக் கடைகள்ல கேட்டாலும் அதெல்லாம் எடுத்துட்டு போலாம்னு சொல்லுவாங்க. ஆனா கர்நாடக அரசு ஒரு பாட்டிலை கூட அவங்க எல்லைக்குள்ள அனுமதிக்க மாட்டாங்க. உஷாரா இருங்க. ஏரோபிளேன்ல வரவங்களுக்கு இது பொருந்தாது. விமான பயண தூரத்தை பொறுத்து எவளோ மது எடுத்துட்டு போலாம்னு விமான நிலைய அதிகாரிகள் முடிவு பண்ணுவாங்க. சென்னை விமானத்துல பொதுவா ஒரு ஆள் ரெண்டு பாட்டில் கொண்டு வரலாம்.

மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்கி இருக்கீங்களா: இப்படி இஎம்ஐ கட்டினால், பணம் மிச்சம்

ஆட்டோ டாக்ஸி

முடிஞ்ச வரைக்கும் சொந்த வாகங்களை கோவாவுக்குள்ள பயன்படுத்துறது நல்லது. அப்படி முடியாதவங்க வாடகைக்கு பைக்கையோ, காரையோ எடுத்துக்கோங்க. ஆட்டோ இல்லனா கால் டாக்ஸி எடுத்தீங்கன்னா அது கண்டிப்பா உங்க பட்ஜெட்டை பதம் பார்க்காம விடாது.

Goa

மசாஜ் நிலையங்கள்

மசாஜ் மட்டுமே செய்யக்கூடிய நிறைய மசாஜ் நிலையங்கள் கோவா முழுக்க இருக்கு. ஆனா பாலியல் தொழில் மாதிரியான நடவடிக்கைகள்ல ஈடுபட்டா ஏற்கனவே சொன்ன மாதிரி கோவா அரசு கடுமையான தண்டனை கொடுக்க காத்திருக்கு. அதனால அது மாதிரியான நிலையங்களுக்கு போறதை தவிர்க்கனும்.

கஸினோ

கோவாவுல கஸினோவுக்கு தடை இல்லைதான்னாலும் உங்களோட பணத்தை மொத்தமா காலி செய்யக்கூடிய ஒரு இடம்தான் கஸினோ. சூதாட்ட களமான கஸினோ முதல்ல கொஞ்சம் பணத்தை கொடுக்கற மாதிரி கொடுத்து மொத்தமா வாரிட்டு போயிடும். முழுமையான புரிதல் இல்லாம கஸினோ போறதை தவிர்த்திடுங்க.

Goa

பெண்களிடம் அத்துமீறல்

கோவா ஒரு பார்ட்டி மாநிலம். மாலை நேரங்கள்ல பீச் பகுதிகள்ல எல்லாருமே போதையிலதான் இருப்பாங்க. கிளப்கள்ல, ஷாக்கள்ல பார்ட்டி பண்ணிக்கிட்டு டேன்ஸ் ஆடிக்கிட்டு இருப்பாங்க. பெண்கள், ஆண்கள் எல்லாரும் சேர்ந்துதான் ஆடுவாங்க. உங்களுக்கு தெரியாத எதிர்பாலினத்தவர்களோட சேர்ந்து கூட பார்ட்டி பண்ணலாம். ஆனா அவங்களுக்கு விருப்பமில்லாம எதையுமே பண்ணிடாதீங்க. போதையில இருந்தாலும் நிதானமா இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்.

மேலும் படிக்க  | Elon Musk Vs Twitter: டிவிட்டர் Poison pill உத்தியை கடைபிடிப்பது ஏன்

உற்று பார்ப்பது, போட்டோ எடுப்பது

கோவாவுல ஆடை சுதந்திரம் ரொம்ப சாதாரணம். அதை காரணமா வெச்சு அவங்களை உற்று உற்று பார்ப்பதும் அனுமதியில்லாம போட்டோ எடுப்பதும் முகம் சுளிக்க வைக்கும். இதையெல்லாம் சரியா பண்ணி ஓவர் போதையாகாம நிதானமா இருந்தா கோவாவை ரசிச்சிட்டு பார்ட்டி பண்ணிட்டு வரலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News