Vodafone Idea அதாவது Vi, இப்போது ஒரு புதிய ‘Digital Exclusive’ ப்ரீபெய்ட் பிளானை அளிக்கிறது. இதில் ரூ .399 ரூபாய் மதிப்புள்ள பிளான் அளிக்கப்படுகிறது. நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து சிம் கார்ட் ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்காக இந்த பிளான் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
கடைகளுக்கு சென்று சிம் கார்ட் வாங்குபவர்களுக்கு இந்த 399 ரூபாய் திட்டம் கிடைக்காது. இருப்பினும் அவர்களுக்கு ரூ. 97, ரூ. 197, ரூ. 297, ரூ. 497 மற்றும் ரூ .647 ஆகிய மற்ற ஐந்து ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கும்.
கடந்த மூன்று நாட்களில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்கள் தங்கள் நெட்வொர்க்கில் ஆர்வம் காட்டியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நவம்பர் மாதத்தில் உயர் தர அழைப்புகளுக்கான பயனர் மதிபீட்டில் Vodafone Idea, Reliance jio மற்றும் Airtel-ஐ தோற்கடித்துள்ளது என்று டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது. TRAI இன் சமீபத்திய தரவுகளின்படி, சேவை வழங்குநர்களில், குரல் தரத்தின் அடிப்படையில் Idea முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து Vodafone உள்ளது. Vodafone Idea கூட்டாக, மற்ற சேவை வழங்குனர்களான Airtel, Reliance Jio மற்றும் BSNL-ஐ கடந்து சென்றது.
ALSO READ: BSNL Plan Prepaid: ஒவ்வொரு நாளும் 2GB தரவு மற்றும் பல சலுகை.. புதிய 199 திட்டம்
TRAI இன் மைகால் டாஷ்போர்டில் உள்ள பயனர் தரவு 2G, 3G மற்றும் 4G உள்ளிட்ட அனைத்து பிணைய வகைகளிலும் உருவாக்கப்படுகிறது. சிறந்த ஒழுங்குமுறை அமைப்பின் கூற்றுப்படி, அதன் மைகால் டாஷ்போர்டில் உள்ள தரவு பயன்பாட்டில் பயனர்கள் வழங்கிய குரல் அழைப்பு தரக் கருத்தை எடுத்துக்காட்டுகிறது.
நவம்பர் மாதத்தில் Idea, 4.9 என்ற சராசரி குரல் தர மதிப்பீட்டுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து Vodafone 4.6 என்ற மதிப்பீட்டுடன் உள்ளது.
முன்னதாக அக்டோபர் மாதத்தில், BSNL 3.7 மதிப்பீட்டுடன் குரல் தரத்தில் முதலிடத்தையும், Airtel 3.5, Idea 3.3, Reliance Jio 3.2, மற்றும் Vodafone 3.1 உடன் கடைசி இடத்தையும் பெற்றன.
ALSO READ: Jan 1 முதல் Whatsapp இந்த phone-களில் இயங்காது: உங்க phone list-ல இருக்கா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR