விநாயகர் சதுர்த்தியில் பிள்ளையாரையே அசரவைக்கணுமா... இந்த கலர் கொழுக்கட்டையை செய்யுங்க!

Colourful Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் உள்ளவர்களை அசரவைக்க, இயற்கையான முறையில் கலர் கலராக கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை இதில் விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 5, 2024, 03:00 PM IST
  • விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்வது வழக்கம்.
  • அதுவும் பூரணத்துடன் கூடிய இனிப்பு கொழுக்கட்டையே அதிகம் செய்வார்கள்.
  • கொழுக்கட்டை விநாயகருக்கு உகந்தது என்பது ஒரு நம்பிக்கை.
விநாயகர் சதுர்த்தியில் பிள்ளையாரையே அசரவைக்கணுமா... இந்த கலர் கொழுக்கட்டையை செய்யுங்க! title=

Vinayagar Chaturthi Special Colourful Kozhukattai Recipe In Tamil: விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வரும் சனிக்கிழமை அன்று விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்து கடவுளான விநாயகருக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாப்படுகிறது எனலாம். 

இந்த விநாயகர் சதுர்த்தியில் (Vinayagar Chaturthi) வீட்டில் இனிப்பு கொழுக்கட்டைகளை செய்வது வாடிக்கையானது. கொழுக்கட்டைகளுக்கு நடுவே இனிப்பு பூரணம் வைத்து, அதை விநாயகருக்கு படைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாப்பிடக்கொடுப்பது வழக்கமாகும். 

வித்தியாசமான கொழுக்கட்டை

நம் வீட்டுக்கு மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் தொடங்கி பலருக்கும் வீட்டில் தயார் செய்த இந்த கொழுக்கட்டைகளை நாம் கொடுப்போம். கொழுக்கட்டைகளில் சிலவற்றை நாம் அடுத்த நாள் காலையில் கூட எடுத்துச் சாப்பிடுவோம். எனவே, விநாயகர் சதுர்த்தியையும் கொழுக்கட்டையையும் நமது நினைவில் இருந்து பிரிப்பது கடினம் எனலாம். 

மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி 2024.. தேதி, பூஜை நேரம் மற்றும் முக்கியத்துவம்

அப்படியிருக்க, ஒரு சில வீட்டில் புதுமையான முறைகளில் கொழுக்கட்டைகளை தயார் செய்வார்கள். பூவரசம் மர இலைகளில் கொழுக்கட்டைகளை அவித்து அதனை உண்பதையும் நாம் ஊர்ப்புறங்களில் அதிகம் பார்த்திருப்போம். அந்த வகையில், நீங்கள் வித்தியாசமாக கொழுக்கட்டைகளை தயார் செய்ய வேண்டும் என நினைத்தால் இதோ உங்களுக்கு என்று புது கொழுக்கட்டையை இங்கு அறிமுகம் செய்கிறோம். 

பெரும்பாலும் கொழுக்கட்டையை வெள்ளை நிறத்தில்தானே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்த செய்முறையை பின்பற்றி நீங்கள் தயார் செய்தால் கொழுக்கட்டை கலர், கலராக வரும். கலராக கொழுக்கட்டை என்ற உடன் ஏதும் கெமிக்கல் அல்லது பொடியை சேர்க்க வேண்டுமோ என நினைக்க வேண்டாம். இயற்கையான முறையிலேயே, வெறும் சில பூக்களை வைத்துக்கொண்டு நீங்கள் கலர் கலராக கொழுக்கட்டையை வீட்டில் தயார் செய்யலாம். இந்த கலர் கலரான கொழுக்கட்டையை செய்வது எப்படி, அதற்கான பூரணத்தை செய்வது எப்படி என்ற செய்முறையை இங்கு விரிவாக காணலாம். 

பூரணம் செய்வது எப்படி?

- ஒரு கப் அளவு துருவிய தேங்காயை எடுத்துக்கொள்ளவும். அதன் பின் அதே அளவில் பொடியாக்கிய வெள்ளத்தை எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு சட்டியில் போட்டு, மிதமான சூட்டில் இரண்டு நன்கு கலக்கும் வகையில் கிளறவும்

- தேங்காயும், வெள்ளமும் ஒன்றுடன் ஒன்று நன்றாக சேர்ந்துவிட்ட பின்னர் அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி, அரை ஸ்பூன் சுக்குப் பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறிவைத்துக்கொண்டால், கொழுக்கட்டைக்கு உள்ளே வைக்கும் பூரணம் ரெடி.

கலர் கலராக கொழுக்கட்டை செய்வது எப்படி?

- அதன்பின், 10 சங்குப் பூக்களையும், 10 செம்பருத்திப் பூக்களையும் எடுத்துக்கொள்ளவும். அனைத்து பூக்களின் காம்புகளையும் அகற்றிவிட்டு இதழ்களை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும். அந்த இதழ்களை நன்கு கழுவிக்கொள்ளவும்.

- அதன்பின், 2 கப் தண்ணீரை சுடவைத்துக்கொண்டு அதில் கால் ஸ்பூன் உப்பு போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்த பின்னர் 10 சங்குப்பூக்களையும் அதில் போடவும். 2-3 நிமிடங்களில் அந்த பூக்களின் மொத்த நிறங்களும் நீரில் இறங்கிவிடும். 

- 1 கப் கொழுக்கட்டை மாவில் சங்குப்பூவின் நிறம் இறங்கிய சுடுதண்ணீரை ஊற்றி அரை ஸ்பூன் நெய்விட்டு பிசைந்துகொள்ளுங்கள். 2-3 நிமிடங்கள் பிசைந்த உடன் கொழுக்கட்டை மாவு, சங்குப்பூவின் நிறத்தோடு நல்ல பதத்திற்கு வந்துவிடும். இதே முறையை நீங்கள் தனியாக செம்பருத்திப் பூக்களையும் ஊறவைத்து, அதன் நிறம் இறங்கிய சுடுதண்ணீரை ஊற்றி தனி மாவை தயார் செய்துகொள்ள வேண்டும். 

- இந்த கொழுக்காட்டை மாவுகளை உங்களுக்கு ஏற்றாற்போல், கொழுக்கட்டை அச்சில் வைத்தோ அல்லது கையில் பிடித்தோ நடுவில் பூரணத்தை வைத்து தயார் செய்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் கலர் கலரான கொழுக்கட்டைகள் ரெடி.

இன்ஸ்டாவில் வைரலான வீடியோ

இந்த கொழுக்கட்டையை எப்படி செய்வது என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் உள்ள 2minutes_chef என்ற சமையல் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இன்ஸ்டாகிராமில் மட்டும் இந்த வீடியோவை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த பக்கத்தில் சமையல் குறித்த 236 வீடியோக்கள் உள்ளன. இந்த பக்கத்தை 4 லட்சத்திற்கும் மேலானோர் பின்தொடர்கின்றனர்.

மேலும் படிக்க | அடுப்பில் கருகிய பாத்திரங்களை பளபளக்க வைக்க சூப்பரான டிப்ஸ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News