Viral Youtube: சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 50 மணி நேரம் இருந்த வீடியோவுக்கு 50 மில்லியன் views

சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 50 மணிநேரம் அப்படியே இருந்த காட்சி யூட்யூபில் வெளியாகி, 50 மில்லியன் பேர் பார்த்து வைரலானது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 4, 2021, 03:50 PM IST
  • சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 50 மணிநேரம் இருப்பது சாதனையா?
  • இருந்த காட்சி யூட்யூபில் வெளியாகி, 50 மில்லியன் பேர் பார்த்து வைரலானது
  • சமூக ஊடகங்களில் விவாதம்
Viral Youtube: சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 50 மணி நேரம் இருந்த வீடியோவுக்கு 50 மில்லியன் views  title=

சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 50 மணிநேரம் அப்படியே இருந்த காட்சி யூட்யூபில் வெளியாகி, 50 மில்லியன் பேர் பார்த்து வைரலானது.

மிஸ்டர் பீஸ்ட் அக்கா ஜிம்மி டொனால்ட்சன்  (MrBeast aka Jimmy Donaldson) என்பவர், யூடியூபில் 57.2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலமானவர். அவர் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு அனைவரையும் மகிழ வைப்பார். ஆனால், உயிருக்கே உலை வைக்கக்கூடிய அவரது முயற்சி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், 50 மில்லியன் பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

சவப்பெட்டியின் உள்ளே இருந்த டொனால்ட்சன்  கிட்டத்தட்ட 50 மணி நேரம் பூமிக்கு அடியில் புதைந்திருந்தார். யூட்யூப் ஒவ்வொரு நாளும் பொழுதுபோக்குகளுக்கான சிறந்த ஒரு இடமாகும். ஆனால் டொனால்ட்சன்  , பொழுபோக்குக்கு பதிலாக சாதனை முயற்சியாக திகிலூட்டும், உயிருக்கு ஆபத்தான இந்த முயற்சியை மேற்கொண்டார். சுய தனிமை (self-isolation) என்ற சொல்லுக்கு அவர் ஒரு புதிய வரையறையை வழங்கியுள்ளார்.

Also Read | April Fool: முட்டாள்கள் தினம்! ஏப்ரல் ஃபூல்; ஏமாந்த ஃபூல்- எப்படி உருவானது?

யூடியூபில் தனது 57.2 மில்லியன் சந்தாதாரர்களை மகிழ்விப்பதற்காக அவர் இரண்டு நாட்களுக்கு மேல் செலவிட்டார், கிட்டத்தட்ட 50 மணி நேரம் சவப்பெட்டியில் நிலத்தடியில் புதைந்திருந்தார். 

இது நிச்சயமாக குழந்தைத்தனமான விளையாட்டல்ல, இந்த ஸ்டண்டை செய்வது என்பது எளிதானதோ சாத்தியமானதோ அல்ல. யூடியூபில் 12 நிமிடம் காணப்படும் வீடியோவில் சவப்பெட்டியில் அவரது 50 மணி நேரத்தின் முக்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் இருந்த சவப்பெட்டியின் உள்ளே வைக்கப்பட்டுள்ள கேமரா அனைத்தையும் பதிவு செய்துள்ளது. 

இது, சவப்பெட்டிக்குள் அவர் கழித்த 50 மணிநேரங்களில், 12 நிமிட சுருக்கம் மட்டுமே என்றாலும், நிதர்சனத்தை எண்ணிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. 

Also Read | "இட்லி அம்மா"வுக்கு புதிய வீட்டு கட்டிக் கொடுக்க முடிவு - வாக்குறுதியை நிறைவேற்றும் ஆனந்த் மஹிந்திரா

கோடிக்கணக்கானோர் பார்த்த சாதனையை ஏற்படுத்தினாலும், இந்த செயல் சமூக ஊடகங்களில் விவாதங்களைத் தூண்டியுள்ளது. நிலத்தடியில் சவப்பெட்டிக்குள் இருந்தபோது அவர் சந்தித்த அசெளகரியங்கள் சலிப்பு மற்றும் அசைவற்ற தன்மை என பல உணர்வுகளையும், சிரமங்களையும்  அவர் விவரித்தார். சவப்பெட்டியில் இருந்தபோது அவர் பாட்டில்களில் சிறுநீர் கழித்ததாக குறிப்பிட்டபோது, ​​அவரது விடாமுயற்சியை அனைவரும் பாராட்டினார்கள். 

அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் மேற்கொண்டிருந்ததாகவும், ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் சமாளிப்பதற்காக மருத்துவக் குழு தயாராக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சவப்பெட்டியில் இருந்து வெளியே வந்த அவர்- “இது முட்டாள்த்தனமானது, எனக்கு மிகவும் தலைவலிக்கிறது, மிகவும் பசிக்கிறது” என்று சொன்னார்.

அது மட்டுமல்ல, "என் முதுகு வலிக்கிறது, எனக்கு மிகவும் அழுத்தமாக, வித்தியாசமாக (claustrophobic) உணர ஆரம்பிக்கிறேன், என் மனதில் சலிப்பு ஏற்படுகிறது, நான் மிகவும் மோசமாக உணர்கிறேன்" என்று மிஸ்டர் பீஸ்ட் சொல்வதும், யூட்யூபில் வைரலாகும் வீடியோவி கேட்கிறது.

Also Read | உலகக் கோப்பை 2011 வெற்றியின் பத்து ஆண்டுகள் நிறைவு: எண்ணிப் பார்த்து மகிழும் Yuvraj Singh

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News